ரஷியா, ஜப்பானில் கடுமையான நிலநடுக்கம்;அடுத்த 3 மணிநேரத்தில் தீவிர சுனாமி எச்சரிக்கை!
Russia, severe earthquake in Japanintense tsunami warning in the next 3 hours
ரஷியா, ஜப்பானில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து ஜப்பான் மற்றும் அமெரிக்க சுனாமி எச்சரிக்கை மையத்தில் இருந்து சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது.
ரஷியாவின் கம்சத்கா தீபகற்ப பகுதியில் அதிக சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 8.7 ஆக பதிவாகி உள்ளதை தொடர்ந்து , ஜப்பான் மற்றும் அமெரிக்க சுனாமி எச்சரிக்கை மையத்தில் இருந்து சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது.
19.3 கி.மீ. ஆழத்தில், 1.65 லட்சம் பேர் வசிக்க கூடிய அவச்சா என்ற கடலோர நகரத்தில், கம்சாத்ஸ்கை நகரில் இருந்து கிழக்கு-தென்கிழக்கே 125 கி.மீ. தொலைவில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது என இதுபற்றி அமெரிக்க புவியியல் மையம் வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டுள்ளது.
பின்னர் அது 8.0 என திருத்தி அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, கம்சத்கா பகுதியில் 3 முதல் 4 மீட்டர் உயரத்திற்கு கடல் அலைகள் பதிவாகின. இதனால், சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது என தகவல் வெளியாகியுள்ளது.
அடுத்த 3 மணிநேரத்தில் தீவிர சுனாமி அலைகள் எழும்ப கூடும் என அமெரிக்காவும் எச்சரித்து உள்ளது. இதனால், பிலிப்பைன்ஸ், பலாவ், மார்ஷல் தீவுகள், சூக், கொஸ்ரே பகுதிகளில் ஒன்று முதல் 3.3 அடி உயரத்திற்கு சுனாமி அலைகள் எழும்ப கூடும் என்ற அச்சத்தில் மக்கள் உள்ளனர்.
தென்கொரியா, வடகொரியா மற்றும் தைவானில் ஓரடிக்கு மேல் உயரத்த்தில் அலைகள் எழும்பும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. ஜப்பான் கடலோர பகுதிகளில் 3 அடி உயரத்திற்கு கடலலைகள் எழும் என அந்நாட்டு வானிலை மையம் எச்சரித்து உள்ளது.
இந்நிலையில், சுனாமி அலைகள் பல அடி உயரத்திற்கு எழும்பியுள்ளன. ரஷியாவின் பல்வேறு பகுதிகளிலும் நிலநடுக்க தாக்கங்கள் பற்றிய தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. நிலநடுக்கம் பற்றிய வீடியோக்களும் வைரலாகி வருகின்றன.
English Summary
Russia, severe earthquake in Japanintense tsunami warning in the next 3 hours