'டிரம்ப் அனைத்து கருத்துகளுக்கும் உடன்பட முடியாது': ரஷ்யா பதிலடி..!
Russia responds by saying it cannot agree with all of Trumps views
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போர் மூன்று ஆண்டுகளைக் கடந்து தொடர்கிறது. இந்நிலையில், நியூயார்க்கில் நடைபெற்ற ஐ.நா., பொது சபை கூட்டத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கலந்துகொண்டார். அப்போது அவர்,உக்ரைன் தான் இழந்த நிலப்பகுதிகளை, ஐரோப்பா மற்றும் 'நேட்டோ' எனப்படும் ராணுவ ஒத்துழைப்பு அமைப்பின் உதவியுடன் மீட்கலாம் என்று குறிப்பிட்டு இருந்தார்.
டிரம்ப்பின் இந்த கருத்துக்கு, ரஷ்யா கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்நாட்டு அதிபர் மாளிகையின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் பதிலளித்து கூறியுள்ளதாவது: ஐ.நா. பொது சபை அமர்வில், உக்ரைன் அதிபர் விலோடிமிர் ஜெலன்ஸ்கியை சந்தித்ததே, டிரம்ப்பின் மாற்றத்திற்குக் காரணம் என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், உக்ரைன் உடனான ராணுவ மோதல் தொடர்பான டிரம்பின் அனைத்து கருத்துகளுக்கும் ரஷ்யா உடன்படாது என்றும், ரஷ்யாவே, ஒருங்கிணைந்த ஐரோப்பாவின் ஒரு பகுதிதான். அதனால், ரஷ்யாவின் பாதுகாப்பை விலையாகக் கொடுத்து, தங்கள் பாதுகாப்பை ஐரோப்பிய நாடுகள் உறுதி செய்ய முடியாது என்று பதிலளித்துள்ளார்.
English Summary
Russia responds by saying it cannot agree with all of Trumps views