ரஷ்யா-உக்ரைன் போர் : உக்ரைனின் முக்கிய நகரத்தை கைப்பற்றிய ரஷ்ய ராணுவம்.! - Seithipunal
Seithipunal


உக்ரைனின் கிழக்கு பகுதியில் உள்ள கெர்சன் நகரை ரஷ்ய ராணுவம் முழுவதும் கைப்பற்றியுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் 8-வது நாளாக தொடர்ந்து வரும் நிலையில், ரஷ்ய படைகள் தரைவழி, கடல்வழி மற்றும் வான்வழி என மும்முனைத் தாக்குதல்களை நடத்தி உக்ரைனின் முக்கிய நகரங்களை கைப்பற்றி வருகின்றனர்.

ஏற்கனவே ரஷ்ய ராணுவம் உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் கார்கிவ் நகருக்குள் நுழைந்து தாக்குதலை நடத்தி வருகின்றனர். அதனைத் தொடர்ந்து தற்போது உக்ரைனின் தெற்கு பிராந்தியத்தில் உள்ள கெர்சன் நகருக்குள் நுழைந்த ரஷ்ய ராணுவம் நேற்று கைப்பற்றியதாக அறிவித்தது.

இந்த நிலையில் ரஷியப் படைகள் கெர்சன் நகரை கைப்பற்றியதை உக்ரைன் அதிகாரிகள் உறுதி செய்துள்ளதாக ஏஎஃப்பி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், உக்ரைனின் கெர்சன் நகரில் தான் துறைமுகங்கள், கப்பல் கட்டும் தொழிற்சாலைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Russia occupied Ukraine kersan city


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->