புதினை விமர்சனம் செய்த ரஷ்ய கோடிசுவரர் - ஓட்டலில் உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


ரஷியா நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் கல்வி கொடையாளருமான பாவெல் ஜென்ரிகோவிச் ஆன்டோவ் என்பவர் இந்திய நாட்டில் உள்ள ஒடிசா மாநிலத்திற்கு சுற்றுலாவிற்காக தனது நண்பர்களுடன் வந்துள்ளார். அங்கு ராயகடா பகுதியில் உள்ள ஓட்டல் ஒன்றில் நண்பர்களிடம் தங்கியிருந்த அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். 

இந்நிலையில், ஓட்டலில் உள்ள மூன்றாவது தளத்தில் ஜன்னல் வழியாக கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். இதைப்பார்த்த ஓட்டல் நிர்வாகம் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளது. அந்த தகவலின் படி, போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்த சம்பவம் குறித்து போலீஸ் சூப்பிரெண்டு விவேகானந்தா சர்மா தெரிவித்ததாவது, "பாவெல் கடந்த ஞாயிற்று கிழமை உயிரிழந்துள்ளார். அவருடைய குடும்பத்தினரின் அனுமதியை பெற்று ஆன்டோவின் உடலை நேற்று தகனம் செய்து விட்டோம் என்றுத் தெரிவித்துள்ளார். 

இதையடுத்து, ரஷிய நாடாளுமன்ற துணை சபாநாயகரான வியாசெஸ்லாவ் கார்துகின் தெரிவித்ததாவது, "எங்களது சக உறுப்பினர், ஒரு வெற்றிகர தொழில் முனைவோரான மற்றும் ஏழைகளுக்கு உதவும் தனவந்தரான பாவெல் ஆன்டோவ் மரணம் அடைந்துள்ளார். அவருடைய உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து கொள்கிறேன் என்றது தெரிவித்துள்ளார்.

ஆன்டோவின் சக கட்சி உறுப்பினரான விளாடிமிர் புடானோவ் என்பவர் அதே ராயகடா ஓட்டலில் மரணம் அடைந்தார். அவர் மரணமடைந்த சில நாட்களுக்குள் பாவெல்லும் மரணம் அடைந்துள்ளார். உக்ரைனுக்கு எதிரான ரஷிய படையெடுப்பினை தொடர்ந்து, ரஷிய அதிபர் புதினை கடுமையாக விமர்சித்தவர்களில் ஆன்டோவும் ஒருவர் ஆவார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

russia mp Pavel Genrikovich Andov died in odisa


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->