ரஷ்யாவுடன் இணையும் உக்ரைன் பகுதிகள்.! அதிபர் புதின் வெளியீடு..! - Seithipunal
Seithipunal


ரஷியா உக்ரைன் நாட்டின் மீது நடத்திய போரில், உக்ரைனின் பல்வேறு நகரங்களை ஆக்கிரமித்துள்ளது. மேலும் பல நகரங்களை கைப்பற்ற ரஷிய படைகள் தொடர்ந்து போர் செய்து வருகின்றன. 

இந்நிலையில் உக்ரைனில் ரஷ்யா கைப்பற்றிய லுஹான்ஸ்க், டொனட்ஸ்க், கெர்சன் மற்றும் ஜாபோர்ஜியா உள்ளிட்ட  நான்கு பிராந்தியங்களை தன்னுடன் இணைத்து கொள்ள முடிவு செய்துள்ளது. 

இதுகுறித்து, உக்ரைனில் உள்ள நான்கு பிராந்தியங்களை சேர்ந்த மக்களின் விருப்பத்தை தெரிந்து கொள்ள ரஷியா கடந்த 23-ந் தேதி முதல் நேற்று முன்தினம் வரை பொதுவாக்கெடுப்பை நடத்தியது. "ரஷிய ஆக்கிரமிப்பு பகுதிகளில் நடைபெறும் இந்த வாக்கெடுப்பில் ரஷியாவுக்கு ஆதரவாகத்தான் முடிவுகள் வெளியாகும்" என்று மேற்கத்திய நாடுகள் ஏற்கனவே குற்றம் சாட்டியிருந்தன. 

இந்த பொதுவாக்கெடுப்பில் ரஷியா வெற்றி பெற்றுள்ளதாக அறிவித்துள்ள நிலையில், 4 பிராந்தியங்களிலும் உள்ள பெரும்பாலான மக்கள் ரஷியாவுடன் இணைவதற்கு ஆதரவாக வாக்களித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இந்த வாக்கெடுப்பில், ஜாபோர்ஜியா பிராந்தியத்தில் 93 சதவீதம் பேரும், கெர்சன் பிராந்தியத்தில் 87 சதவீதம் பேரும், லுஹான்ஸ்க் மற்றும் டொனட்ஸ்க் பிராந்தியங்களில் முறையே 99 மற்றும் 98 சதவீதம் பேரும் ரஷியாவுடன் இணைய ஆதரவு தெரிவித்துள்ளதாக ரஷியா தெரிவிக்கிறது.

இதையடுத்து, உக்ரைனின் இந்த நான்கு பிராந்தியங்களையும் ரஷியாவுடன் இணைத்து கொள்வது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பை ரஷ்ய அதிபர் புதின் நாளை  வெளியிடுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

russia added occupide ukrain places


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->