தன்னலமற்ற மனிதநேயப் பணியினை செய்ய சாரணர் இயக்கத்தை தொடங்கிய தொடங்கியவர் பிறந்த தினம்.!! - Seithipunal
Seithipunal


பேடன் பவல் :

தன்னலமற்ற மனிதநேயப் பணியினை செய்ய சாரணர் இயக்கத்தை தொடங்கிய ராபர்ட் பேடன் பவல் பிரபு 1857ஆம் ஆண்டு பிப்ரவரி 22ஆம் தேதி லண்டனில் பிறந்தார்.

இவர் 1907ஆம் ஆண்டு சாரணர் இயக்கத்தை தோற்றுவித்தார். முதலில் சாரணியம் ஓர் சோதனை முயற்சியாக 20 சிறுவர்களுடன் தொடங்கியது. பிறகு தேசிய ரீதியில் துவங்கப்பட்ட இம்முயற்சி பின்னர் உலக அளவில் புகழ்பெற்றது.

உலகம் முழுவதும் இந்த இயக்கம் வெற்றிகரமாக கிளை விரித்தது. 28 நாடுகள் இவருக்கு பரிசுகளும், விருதுகளும் வழங்கி சிறப்பித்தது.

சாரணியத்தின் தந்தை என அழைக்கப்படும் இவர் 1941ஆம் ஆண்டு மறைந்தார்.

ஜார்ஜ் வாஷிங்டன் :

அமெரிக்காவின் தந்தை எனப் போற்றப்படும் ஜார்ஜ் வாஷிங்டன் 1732ஆம் ஆண்டு பிப்ரவரி 22ஆம் தேதி அமெரிக்காவின் வர்ஜீனியா மாநிலத்தில் பிறந்தார்.

இவர் 1753ஆம் ஆண்டு ராணுவத்தில் சேர்ந்தார். பிறகு 1775ஆம் ஆண்டு அமெரிக்கப் புரட்சியில் ராணுவத்தின் தலைமை தளபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1783ஆம் ஆண்டு அமெரிக்க சுதந்திரப் போர் முடிந்தது. இவர் அர்ப்பணிப்பு உணர்வுடன் போரை நடத்தி வெற்றிக்குப் பெரும் பங்காற்றினார். மேலும் இவர் 1789ஆம் ஆண்டு அமெரிக்காவின் முதல் அதிபராகப் பதவி ஏற்றார். 100 சதவீதம் வாக்குகள் பெற்ற ஒரே அதிபர் இவர்தான். 

அமெரிக்க வரலாறே இவரிடம் இருந்துதான் தொடங்குவதாக கருதப்படும் பெருமைக்குரிய இவர் 1799ஆம் ஆண்டு மறைந்தார்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

robert baden powell birthday 2022


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->