அத்துமீறிய அமெரிக்க போர் கப்பல்- ஈரான் கடல் பகுதியில் பதற்றம்!
Provocative American warship tension in the Iranian sea area
ஓமன் வளைகுடா பகுதியில் ஈரான் கடல்வழி பகுதிக்குள் அமெரிக்க போர்க்கப்பலான யு.எஸ்.எஸ். பிட்ஸ்ஜெரால்டு அத்துமீறி நுழைய முயன்றது. இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.
அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்கா- ஈரான் இடையே நீண்ட காலமாக மோதல் போக்கு இருந்து வருகிறது. சமீபத்தில் அணு ஆயுதம் தயாரிப்பது தொடர்பாக இஸ்ரேல்- ஈரான் இடையே மோதல் ஏற்பட்டது.அப்போது இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா களம் இறங்கியது.இதனால் இஸ்ரேல்- ஈரான் இடையே போர் பதற்றம் உருவானது.
இதையடுத்து ஈரானின் 3 முக்கிய அணு நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது.கடைசியில் சண்டை முடிவுக்கு வந்தது.இந்த தாக்குதல் சம்பவத்தில் இஸ்ரேல்- ஈரான் நாடுகளில் கடும் சேதம் ஏற்பட்டன .இதற்கிடையே அணுசக்தி ஒப்பந்தத்தை ஈரான் ஏற்க வேண்டும் என்று தொடர்ந்து அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது.இந்த நிலையில் ஈரான் கடல் பகுதிக்குள் அமெரிக்க போர் கப்பல் அத்துமீறியதாக ஈரான் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக ஈரானின் அரசு கூறியதாவது:-ஓமன் வளைகுடா பகுதியில் ஈரான் கடல்வழி பகுதிக்குள் அமெரிக்க போர்க்கப்பலான யு.எஸ்.எஸ். பிட்ஸ்ஜெரால்டு அத்துமீறி நுழைய முயன்றது.
ஈரானிய படையை சேர்ந்த ஹெலிகாப்டர் ஒன்று புறப்பட்டு சென்று அமெரிக்க போர் கப்பலை எதிர்கொண்டது. அந்த ஹெலிகாப்டர் அமெரிக்க கப்பலின் மீது நேரடியாகப் பறந்து சென்றது.
அப்போது ஈரான் ஹெலிகாப்டர் அந்த பகுதியை விட்டு செல்லவில்லை என்றால், அதனை இலக்காக கொள்ள வேண்டியிருக்கும் என அமெரிக்க கப்பலில் இருந்து அச்சுறுத்தல் விடப்பட்டது.
இதற்கு பதிலளித்த ஈரான் விமான பாதுகாப்பு படையினர், அந்த ஹெலிகாப்டர், ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு திட்ட முழு பாதுகாப்பின் கீழ் உள்ளது என தெரிவித்தது. இறுதியாக, அமெரிக்க கப்பல் தெற்கு நோக்கி பின்வாங்கி சென்றது என தெரிவித்தது.இதுதொடர்பாக அமெரிக்க மத்திய கட்டளை படை கூறும்போதுஅமெரிக்க கப்பலுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. தவறான தகவல்களைப் பரப்ப ஈரான் முயற்சிக்கிறது என்றும் தெரிவித்தது.
English Summary
Provocative American warship tension in the Iranian sea area