அமெரிக்கா : அமேசான் விற்பனை நிலையத்தில் கர்ப்பிணி பெண் சுட்டுக்கொலை.! - Seithipunal
Seithipunal


அமெரிக்காவில் அமேசான் விற்பனை நிலையத்தின் கார் பார்க்கிங்கில் கர்ப்பிணி பெண் சுட்டுக்கொல்லப்பட்டார்.

அமெரிக்கா மினியாபோலிஸின் புறநகர்ப் பகுதியான லேக்வில்லியில் உள்ள அமேசான் விற்பனை நிலையத்தின் வாகன நிறுத்தத்தில் ஒரு கார் நீண்ட நேரமாக நின்றுள்ளது. இதனால் சந்தேகமடைந்த நிறுவன ஊழியர்கள் அந்த காரின் அருகே சென்று பார்த்தனர். அப்பொழுது காருக்குள் 31 வயதான கைலா ஓ'நீல் என்ற கர்ப்பிணி ஒருவர் துப்பாக்கி குண்டு காயங்களுடன் கிடந்துள்ளார்.

இதையடுத்து அந்த பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்த விசாரணையில் கர்ப்பிணி பெண்ணை சுட்டுக்கொன்றது, அமேசான் நிறுவனத்தில் பணிபுரியும் 32 வயதான டொன்டே ரபேல் மெக்ரே என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் டொன்டே ரபேல் மெக்ரேவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Pregnant woman fatally shot in Amazon centre parking in America


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->