அர்ஜென்டினா மற்றும் சிலியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை அறிவிப்பு..!
Powerful earthquake in Argentina and Chile Tsunami warning issued
தென் அமெிரக்க நாடான அர்ஜென்டினா அருகே கடலில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 7.4 ஆக பதிவாகியுள்ளது.
குறித்த நிலநடுக்கத்தின் எதிரொலியால், தென் அமெரிக்கா கண்டத்தில் அமைந்துள்ள சிலி நாட்டில் மாகல்லன்ஸ் பகுதியில் உள்ள புவேர்ட்டோ வில்லியம்ஸுக்கு தெற்கே 218 கி.மீ. தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் 7.5 ஆக பதிவாகியுள்ளது. இரு நாடுகளில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கங்களை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அர்ஜென்டினாவில் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

அத்துடன், ஆப்கானிஸ்தானிலும் இன்று இரவு 4.5 ரிக்டர் அளவுகோலில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. இரவு 8.20 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம்ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
150 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 35.00 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 68.27 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை.
English Summary
Powerful earthquake in Argentina and Chile Tsunami warning issued