இந்தோனேசியாவில் 7.7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; இடிபாடுகளில் சிக்கி 20 பேர் உயிரிழப்பு..!
Powerful earthquake hits Indonesia
இந்தோனேசியாவின் கிழக்கில் உள்ள நுசா தெங்காரா மாகாணத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. உள்ளூர் நேரப்படி அதிகாலை 05 மணிக்கு ஏற்பட்டுள்ள இந்த நிலநடுக்கமானது பூமிக்கு அடியில் சுமார் 15 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
குறித்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.7 ஆகப் பதிவாகி இருப்பதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தில் கட்டடங்கள் குலுங்கியதால், பொதுமக்கள் அச்சத்துடன் வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். ஒரு சில கட்டடங்கள் சரிந்தும் விழுந்துள்ளன. இடிபாடுகளில் சிக்கி 20 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து, அப்பகுதிக்கு சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. இதையடுத்து,நுசா தெங்காரா, சுலாவேசி மாகாணங்களில் கடலோரப் பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டனர். சிறிது நேரத்திற்குப் பிறகு சுனாமி எச்சரிக்கை திரும்பப் பெறப்படுவதாக அந்நாட்டு வானிலை மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கங்கள், எரிமலை வெடிப்புகள் அடிக்கடி நிகழும் "பசிபிக் நெருப்பு வளையம்" பகுதியில் இந்தோனேசியா அமைந்திருப்பதால், அந்நாடு எப்போதும் இதுபோன்ற இயற்கை இடர்பாடுகளை எதிர்கொள்ளும் அபாயத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
English Summary
Powerful earthquake hits Indonesia