பாகிஸ்தான் : சிலிண்டர் தட்டுப்பாட்டால் பிளாஸ்டிக் கவர்களில் கியாஸ் வாங்கும் மக்கள்.! - Seithipunal
Seithipunal


கடந்த சில ஆண்டுகளாக பாகிஸ்தான் நாட்டில் ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடியால் பாகிஸ்தான் அரசாங்கம் மக்களுக்கு அடிப்படைத் தேவைகளை வழங்கத் தவறிவிட்டது. பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகளவில் உயர்ந்துள்ளதனால் மக்கள் அன்றாட வாழ்வில் பல்வேறு சிக்கல்களை சந்திக்கின்றனர். 

இந்நிலையில் பாகிஸ்தானில் வீட்டில் பயன்படுத்தும் கியாஸ் சிலிண்டர் உற்பத்தி போதிய அளவு இல்லாததால் சிலிண்டருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டதோடு விலையும் அதிகரித்து வருகிறது. இதனால் கியாஸ் சிலிண்டர் விற்பனையாளர்களும் அதன் வினியோகத்தை குறைத்துள்ளனர். 

இதன் விளைவாக பாகிஸ்தான் நாட்டிலுள்ள கைபர் பக்துங்வா மாகாணத்தில் மக்கள் சிலிண்டர்களுக்கு பதிலாக பிளாஸ்டிக் பைகளில் கியாஸ் நிரப்பி செல்லும் வீடியோ மற்றும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலானதை தொடர்ந்து, இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. 

இந்த சம்பவம் குறித்து அந்நாட்டு செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளதாவது, "கியாஸ் விற்பனை நிலையங்களில் பிளாஸ்டிக் பைகளில் மூன்று அல்லது நான்கு கிலோ கியாஸ் நிரப்ப சுமார் ஒரு மணிநேரம் ஆகிறது. பின்னர் கியாஸ் நிரப்பிய பைகளை வால்வு பொருத்தி இறுக்கமாக மூடிக்கொடுக்கிறார்கள்" என்று தெரிவித்துள்ளது. 

அவ்வாறு பிளாஸ்டிக் பைகளில் கியாஸை நிரப்பி செல்லும் மக்கள் அந்த பிளாஸ்டிக் பையில், மின்சாரத்தில் இயங்கக்கூடிய சிறிய உறிஞ்சு குழாயை பொருத்தி பயன்படுத்துவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இதற்கிடையே, பிளாஸ்டிக் பைகளில் கியாஸ் நிரப்பி செல்வது கையில் வெடிகுண்டு எடுத்து செல்வதற்கு சமம். இதனால் மோசமான விபத்துகள் நிகழ்வதற்கு வாய்ப்புள்ளது என்று சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். 

மேலும், இந்த பிளாஸ்டிக் பைகளால் காயமடைந்து எட்டு நோயாளிகள் பாகிஸ்தான் மருத்துவ அறிவியல் கழகத்தின் தீக்காய பராமரிப்பு மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pakisthan peoples cooking gas store in plastic cover


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->