அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் கடும் கண்டனம்
Pakistan strongly condemns the United States
அமெரிக்க அதிபர் டிரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என நேற்று பாகிஸ்தான் பரிந்துரை செய்திருந்த நிலையில், தற்போது அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்துள்ளது.
ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற பெயரில் ஈரான் மீது கடந்த 13-ந்தேதி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. ஈரானின் அணு ஆயுத பயன்பாட்டுக்கு எதிரான தாக்குதல் இது என இஸ்ரேல் தெரிவித்தது.
இதனை தொடர்ந்து ஈரானும் பதில் தாக்குதலில் ஈடுபட்டது. இதனால், 2 நாடுகள் இடையே போர் பதற்றம் அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில், ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும் போரில் இறங்கியுள்ளது.
ஈரானின் 3 அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தியதாக அதிபர் டிரம்ப் அறிவித்திருந்தார். இந்நிலையில் தாக்குதல்களுக்குப் பிறகும் அமைதி ஏற்படாவிட்டால் மிகப் பெரிய தாக்குதல் நடத்தப்படும் என்று டிரம்ப் எச்சரித்துள்ளார்.இந்தநிலையில் அமெரிக்காவின் தாக்குதல் சர்வதேச சட்டத்தை மீறுவதாக ஈரான் அணுசக்தி கழகம் கண்டனம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் அமெரிக்க தாக்குதலில் பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பில்லை என்று ஈரான் விளக்கம் அளித்துள்ளது.அதுமட்டுமல்லாமல் , ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதலுக்கு பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பாகிஸ்தான் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதல் அனைத்து சர்வதேச சட்டங்களுக்கும் எதிரானது. தாக்குதலில் இருந்து தங்களை தற்காத்துக்கொள்ள ஈரானுக்கு சட்டப்பூர்வ அதிகாரம் உள்ளது" என தெரிவித்துள்ளது.
English Summary
Pakistan strongly condemns the United States