பாகிஸ்தானின் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை வெற்றி...! போர்முனைப்பில் பாகிஸ்தான்...!
Pakistan ballistic missile test success Pakistan brink war
இந்தியா -பாகிஸ்தான் இடையே, ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலால், ராஜாங்க ரீதியாகவும், ராணுவ ரீதியாகவும் போர் பதற்றம் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் பாகிஸ்தான், 450 கி.மீ தூரம் வரை சென்று தாக்கும் ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்ததாக தற்போது தெரிவித்துள்ளது.
இந்த தரையில் இருந்து தரைக்கு பாயும் பாலிஸ்டிக் ஏவுகணையின் பெயர் 'அப்தாலி', இது பாகிஸ்தானால் 'சோன்மியானி ரேஞ்சில்' சோதிக்கப்பட்டது.
மேலும், பாகிஸ்தான் ஊடக அறிக்கைகளின்படி, அப்தாலி ஆயுத அமைப்பு என்று அழைக்கப்படும் இந்த ஏவுகணை, 'எக்சர்சைஸ் சிந்து' என்ற இராணுவப் பயிற்சியின் கீழ் சோதிக்கப்பட்டுள்ளது.
இது ஒரு எச்சரிக்கையை இந்திய கருதுகிறது.மேலும் தனது ஆயுதப்படைகளை திரும்பிப் பார்க்கவேண்டிய நேரமாகவும் கருதுகிறது.
English Summary
Pakistan ballistic missile test success Pakistan brink war