பிலிப்பைன்ஸ்: கோழி இறைச்சியை விட வெங்காயத்தின் விலை 3 மடங்கு உயர்வு.! - Seithipunal
Seithipunal


தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைனஸில் முறையற்ற விநியோகம் மற்றும் உள்நாட்டு உற்பத்தி குறைந்ததாலும் அத்தியாவசிய காய்கறிகளின் விலை பன்மடங்கு அதிகரித்துள்ளது.

இந்நிலையில் மக்கள் பயன்படுத்தும் முக்கிய காய்கறிகள் ஒன்றான வெங்காயம் கிலோவுக்கு 600 பிசோஸ் அதாவது இந்திய ரூபாயின் மதிப்பில் கிலோ 887 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இது கோழி இறைச்சியை விட மூன்று மடங்கும், ஆட்டு இறைச்சியை விட 25 -50 சதவீதம் அதிகம்.

மேலும் பிலிப்பைனஸ் நாட்டை பொறுத்த வரையில் அனைத்து விதமான உணவு வகையிலும் வெங்காயம் மற்றும் பூண்டு அதிக அளவு சேர்க்கப்படுகிறது. சராசரியாக ஒரு வாரத்திற்கு 17,000 மெட்ரிக் டன் காய்கறிகள் தேவைப்படுகிறது. மக்களின் தேவை அதிகரிப்பதாலும், உள்நாட்டு உற்பத்தி குறைவாக இருந்ததாலும், வெங்காயத்தின் விலை உயர்ந்தற்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது.

ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையேயான போரினால் விநியோக சந்தைகளில் ஏற்பட்டுள்ள மாற்றமே பல நாடுகளில் பண வீக்கத்தையும், உணவு பொருட்களின் விலையையும் அதிகரிக்க செய்துள்ளது. மேலும் இதன் தாக்கமே பிலிப்பைன்சிலும் எதிரொலிப்பதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Onions price three times more than chicken in Philippines


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->