ஜெருசலேம் நகரில் 2 வெடிகுண்டு தாக்குதல்கள்.! ஒருவர் பலி, 22 காயம் - Seithipunal
Seithipunal


ஜெருசலேம் நகரில் அடுத்தடுத்து இன்று காலை 2 வெடிகுண்டு தாக்குதல்களில் ஒருவர் உயிரிழந்துள்ளனர். மேலும் 22 பேர் காயமடைந்துள்ளனர்.

மேற்கு ஜெருசலேம் நகரின் கிவாத் ஷால் பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தம் ஒன்றின் நுழைவு வாயிலில் காலை 7 மணியளவில் வெடிகுண்டு தாக்குதல் நடந்துள்ளது. இந்த தாக்குதலை தொடர்ந்து ரமோத் ஜங்சனில், நகரின் நுழைவு வாயில் பகுதியில் 2-வது வெடிகுண்டு தாக்குதல் நடந்துள்ளது.

இந்த தாக்குதல்களுக்கு எந்தவொரு குழுவும் உடனடியாக பொறுப்பேற்கவில்லை. இந்த முதல் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 17 பேர் காயமடைந்துள்ளனர். இதில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 11 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டு மவுண்ட் ஸ்கோபஸ் மருத்துவ மையத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மேலும் 2-வது வெடிகுண்டுதாக்குதலில் 5 பேர் காயமடைந்துள்ளனர். இந்த வெடிகுண்டு தாக்குதல் ஆணிகளை பயன்படுத்தி நடத்தப்பட்டது என்று கூறப்படுகிறது. இந்நிலையில் ஜெருசலேமில் நடந்த இரட்டை வெடிகுண்டு தாக்குதல்களில் ஒருவர் பலி மற்றும் 22 பேர் காயமடைந்து உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

One person killed 22 injured in 2 bomb attacks in Jerusalem


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->