வாய்ப்பே இல்லை.. டிரம்ப் பேச்சுக்கு ஜஸ்டின் ட்ரூடோ பதிலடி!  - Seithipunal
Seithipunal


அமெரிக்காவின் ஒரு பகுதியாக கனடா மாறும் வாய்ப்பே இல்லை என்று ஜஸ்டின் ட்ரூடோ திட்டவட்டமாக கூறியுள்ளார். 

கனடாவில் சொந்த கட்சி மற்றும் கூட்டணி கட்சியின் ஆதரவை இழந்ததால் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது பதவியை சமீபத்தில் ராஜினாமா செய்தார்,கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ராஜினாமா செய்வதாக அறிவித்து உள்ள நிலையில் இந்தாண்டு இறுதியில் கனடாவில் தேர்தல் நடைபெற உள்ளது.இந்தநிலையில்  கனடாவில் புதிய பிரதமர் தேர்வு செய்யப்படும் வரை ஜஸ்டின் ட்ரூடோவே பிரதமராக நீடிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சூழலில், அமெரிக்காவின் 51-வது மாகாணமாக, கனடா இணையலாம் என்று அமெரிக்காவின் அதிபராக பதவி ஏற்க உள்ள டொனால்டு டிரம்ப் பேசி வருகிறார். இவரது இந்த பேச்சு உலகளவில் கவனம் பெற்றாலும் கனடாவில் பலர் ஆதரவும் ,எதிர்ப்பும் தெரிவித்துவருகின்றனர்.மேலும் அமெரிக்கா உடன் இணைவதை கனடா மக்களே விரும்புவார்கள் எனக்கூறிய டிரம்ப், வரிகள் குறையும் என்றும் வர்த்தக பற்றாக்குறை இருக்காது என்றும் கனடா பாதுகாப்பாக இருக்கும். அத்துடன், அமெரிக்கா பெரிய தேசமாக மாறும், ஒன்றிணைவோம் என கூறியிருந்தார்.

டிரம்பின் இந்த கருத்து தொடர்பாக தனது மவுனத்தை கலைத்துள்ளார் ஜஸ்டின் ட்ரூடோ, இதுகுறித்து பேசிய  ஜஸ்டின் ட்ரூடோ,அமெரிக்காவின் ஒரு பகுதியாக கனடா மாறும் வாய்ப்பே இல்லை என்று திட்டவட்டமாக கூறியுள்ளார். இது தொடர்பாக ஜஸ்டின் ட்ரூடோ மேலும்  கூறியதாவது:- டொனால்டு டிரம்ப் கூறுவது ஒருபோதும் நடக்க போவது இல்லைஎன்றும்  கனட மக்கள் கனடா குடிமக்களாக இருப்பதிலேயே பெருமை கொள்கிறார்கள் என்றும்  நாங்கள் அமெரிக்கர்கள் இல்லை என கூறிய  ஜஸ்டின் ட்ரூடோ மக்களின் கவனத்தை திசை திருப்பும் நோக்கில் டிரம்ப் இவ்வாறு பேசி வருவதாக நான் கருதுகிறேன்" என கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Not a chance Justin Trudeau responds to Trumps speech 


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->