நாசாவில்  ஆட்குறைப்பு:டிரம்ப் நடவடிக்கையால் ஊழியர்கள் அதிர்ச்சி! - Seithipunal
Seithipunal


மீண்டும் நாசாவில் இரண்டாம் கட்ட ஆட்குறைப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்ற தகவல்கள் வெளியானதால் நாசா ஊழியர்கள் கலக்கத்தில் உள்ளனர். 

இந்த ஆண்டு ஜனவரி மாதம் அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் பதவி ஏற்று கொண்டார், அவர் பதவியேற்று முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறார் ,குறிப்பாக அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறியவர்களை நாடு கடத்தும் பணிகளை தீவிரமாக மேற்கொண்டார் ,அத்துடன் மட்டுமல்லாமல் பல்வேறு நாடுகளுக்கு வர்த்தக ரீதியிலான வரி விதிப்பை அதிகப்படுத்தி அதிர்ச்சி அடை செய்தார் ,இதனால் இந்த வரி விதிப்பால் உலக நாடுகள் அதிருப்திய அடைந்தனர்.

இந்தநிலையில் மீண்டும் இரண்டாம் கட்ட ஆட்குறைப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்ற தகவல்கள் வெளியானதால் நாசா ஊழியர்கள் கலக்கத்தில் உள்ளனர். 

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம் நாசா, ஜனாதிபதி டொனால்டு டிரம்பின் அரசுப் பணியாளர் குறைப்பு உத்தரவை அடுத்து, முக்கிய ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட உள்ளது. இதனால் சுமார் 3,900 பணியாளர்கள் பணி இழக்க உள்ளதாக தகவல் வெளியாகி, ஊழியர்கள் பெரும் கலக்கத்தில் உள்ளனர்.

 நாசாவில் மொத்தம் 14,000 பேர் பணியாற்றுகின்றனர். இதில் 20% ஊழியர்கள், அதாவது 3,900 பேர் வரை இரண்டாம் கட்ட ஆட்குறைப்பில் பணி நீக்கம் செய்யப்பட உள்ளனர். ஏற்கனவே, 2,145 மூத்த அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்படுவதாக கடந்த மாதம் கடிதம் அனுப்பப்பட்டது.பணி நீக்கம் செய்யப்பட்டோர் பெரும்பாலும் சிறப்பு திறன்கள் மற்றும் நிர்வாக அனுபவம் கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 கடந்த ஜனவரியில் வெளியிடப்பட்ட டிரம்ப் நிர்வாக உத்தரவுகளுக்கு இணங்க, நாசா மூன்று துறைகளை மூட முடிவெடுத்தது. ஜூலை 20ஆம் தேதி, நூற்றுக்கணக்கான நாசா ஊழியர்கள் விண்வெளி அருங்காட்சியகம் அருகே போராட்டம் நடத்தினர்.

இந்தநிலையில் இது குறித்து  நாசா செய்தித் தொடர்பாளர் கூறுகையில்:“20 சதவீதம் ஆட்குறைப்பு நிலுவையில் உள்ளது. இதனால் உறுதி செய்யப்பட்ட எண்ணிக்கை விரைவில் அறிவிக்கப்படும்” என்றார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

NASA layoffs Employees shocked by Trumps actions


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->