லண்டனில் இசை மழை சாதனை!!! இளையராஜாவின் சிம்பொனி இசையை கேட்டு மெய்மறந்த ரசிகர்கள்!!! - Seithipunal
Seithipunal


தமிழ் திரையுலகில் இசைப் பயணத்தை தொடங்கி உலக அளவில் ரசிகர்களைக் கவர்ந்தவர் இசைஞானி இளையராஜா. இவர் திரையுலகிற்கு அவரது அண்ணன் மூலம் உள்ளே நுழைந்தார். பின்னர் தனது இசையால் மூளை முடுக்கெங்கும் இவரது பெயரை ஒலிரச் செய்தார். இதனால் இசைஞானி, இசையின் கடவுள், என்றும் இளையராஜா போன்ற பல பட்டங்ளுக்கு ரசிகர்கள் மத்தியில் இன்றும் வரவேற்பு உள்ளது. இவர் இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

இளையராஜா:

மேலும் இளையராஜாவுக்கு மத்திய அரசு ராஜ்யசபா எம்.பி. பதவி வழங்கிக் கௌரவப்படுத்தியது. இது மட்டுமின்றி எண்ணற்ற விருதுகளை இசைக்காக வாங்கிக் குவித்துள்ளார். இவரது இசைக்கு மயங்காதவர்களே கிடையாது. இந்நிலையில், இசை உலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த இளையராஜாவின் முதல் சிம்பொனி இசை, லண்டனில் நேற்று இரவு அரங்கேற்றம் செய்யப்பட்டது. இந்த 'valiant ' சிம்பொனி அரங்கேற்றம் இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணி அளவில் தொடங்கியது.

சிம்பொனி இசை:

இந்த இசையைக் கேட்க உலகம் முழுவதிலும் இருந்து ரசிகர்கள் வந்தனர். சிம்பொனி இசையை வெறும் 35 நாட்களுக்குள் எழுதிஅதனை அரங்கேற்றம் செய்த முதல் இந்தியர் என்ற பெருமையைத் தற்போது இளையராஜா பெற்றுள்ளார். இது லண்டனில் உள்ள புகழ்பெற்ற 'எவென்டிம் அப்பல்லோ' அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சி ரசிகர்களை மெய் மறந்து இசையில் மூழ்கடித்தது. அதற்கு முன்னதாக இளையராஜா மேடைக்கு வந்ததுமே ரசிகர்களின் உற்சாக வரவேற்பு காரணமாக அரங்கமே அதிர்ந்து போனது. மேலும் இந்நிகழ்ச்சியில் யுவன் சங்கர் ராஜா, கார்த்திக் ராஜா, இயக்குனர் பால்கி உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். ஒன்றரை மணி நேரம் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சிம்பொனி மட்டுமே 45 நிமிடங்களுக்கு அரங்கேற்றம் செய்யப்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Music rain record in London Fans were mesmerized by listening to Ilayaraja symphony music


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->