'வங்கதேசத்தில் சிறுபான்மையினர், ஹிந்துக்கள் தாக்கப்படுவதாக வெளியாகும் செய்திகள் போலியானவை': முகமது யூனுஸ்..!
Mohammad Yunus says that the news that minorities and Hindus are being attacked in Bangladesh is fake
வங்கதேசத்தில் சிறுபான்மையினருக்கு எதிராக எந்த வன்முறையும் நிகழவில்லை என அந்நாட்டு இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ் தெரிவித்துள்ளார்.
அந்நாட்டின் முன்னாள் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா, மாணவர் போராட்டத்தை அடுத்து, பதவி விலகியதோடு, இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ளார். இதனையடுத்து, வங்கதேசத்தில் ஹிந்துக்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரிக்கத் தொடங்கியது. ஹிந்து கோவில்கள் இடிக்கப்படுவதும், ஹிந்துக்கள் தாக்கப்படுவதும் இன்னும் நடந்து வருகிறது. குறிப்பாக ஹிந்து கோவில்களில் சிலைகள் சேதமடைந்திருக்கும் வீடியோ இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்நிலையில், அங்கு முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு ஆட்சி வகிக்கிறது. ஹிந்து கோவில்களுக்கு பாதுகாப்பு அளிக்க கோரி மத்திய அரசு பலமுறை வலியுறுத்தி வருகிறது. இது தொடர்பாக, நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர், ஜெட்டியோவைச் சேர்ந்த மெஹ்தி ஹசனுடன் ஒரு நேர்காணலில் முகமது யூனுஸ் கூறியுள்ளதாவது:

'வங்கதேசத்தில் சிறுபான்மையினர் மற்றும் ஹிந்துக்கள் தாக்கப்படுவதாக வெளியாகும் அனைத்து செய்திகளும் போலியானவை. அந்த போலி செய்திகளை நீங்கள் நம்ப கூடாது.' என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், சில நேரங்களில் சில மோதல்கள், சில குடும்பப் பிரச்சினைகள், நிலப் பிரச்னைகள் மற்றும் ஏதாவது காரணம் இருக்கலாம் என்றும், இதுபோன்ற மோதல்களுக்கு வகுப்புவாத சாயம் பூசுவது சரியல்ல என்று தெரிவித்துள்ளார். அத்துடன், இந்த விஷயத்தில் வங்கதேச இடைக்கால அரசு மிகவும் விழிப்புடன் செயல்பட்டு வருகிறதாகவும், ஏனென்றால், இந்தியா எப்போதும் வலியுறுத்தி வரும் ஒரே விஷயம் இதுதான் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நான் அவர்களை ஒரு சமூகமாக சந்திக்கும் போது, 'நான் ஒரு ஹிந்து, அதனால் என்னைப் பாதுகாக்க வேண்டும். நீங்கள் வங்கதேசத்தை விட்டு செல்ல வேண்டாம் என்று நான் கூறுவேன். எப்போதும் 'நான் இந்த நாட்டின் குடிமகன். மக்களுக்கு அரசு வழங்க வேண்டிய அனைத்து பாதுகாப்புகளையும் உறுதி செய்வேன்.' என்று முகமது யூனுஸ் கூறியுள்ளார்.
English Summary
Mohammad Yunus says that the news that minorities and Hindus are being attacked in Bangladesh is fake