கனமழையால் பறிபோன உயிர்கள்.. வெள்ளத்தில் மூழ்கியது ஐக்கிய அரபு.. தவிக்கும் பொதுமக்கள்.! - Seithipunal
Seithipunal


ஐக்கிய அரபு எமிரேட்டில் தொடர் கனமழையின் காரணமாக சாலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஓமனில் பெய்த திடீர் கனமழையின் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18 தாண்டியுள்ளது. 

வரலாறு காணாத கனமழை மற்றும் சூறாவளி காற்று காரணமாக துபாய் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். சூறைக்காற்று மற்றும் மழையின் காரணமாக துபாயில் சர்வதேச விமான நிலையம் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 

ஐக்கிய அரபு நாடுகளில் பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக பல கிலோமீட்டர் தொலைவிற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. கடந்த 24 மணி நேரத்தில் துபாயில் 16 சென்டிமீட்டருக்கு மேல் மழை பதிவாகியுள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Many peoples died in Arabic Emirates due to heavy rain flood


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->