டெல்லி விமான நிலையத்தில் செல்போனில் "வெடிகுண்டு" என்று பேசிய பயணி கைது.! - Seithipunal
Seithipunal


டெல்லி விமான நிலையத்தில் செல்போனில் "வெடிகுண்டு" என்று பேசிய பயணி கைது.!

நாட்டின் தலைநகரான டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், நேற்று மாலை 4.55 மணியளவில் துபாய்க்கு செல்லும் விமானம் புறப்படத் தயாராக இருந்தது. 

அப்போது ஆண் பயணி ஒருவர் செல்போனில் பேசும்போது "வெடிகுண்டு" என்ற வார்த்தையை பயன்படுத்தியுள்ளார். இதைக்கேட்டு, அதிர்ச்சியடைந்த ஒரு பெண் பயணி சம்பவம் குறித்து விமான ஊழியர்களிடம் தெரிவித்துள்ளார். 

உடனே விமான ஊழியர்கள், மத்திய தொழிலக பாதுகாப்பு படைக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி விரைந்து வந்த பாதுகாப்பு படையினர் செல்போனில் பேசிய ஆண் பயணி மற்றும் புகார் அளித்த பெண் பயணி இருவரையும் கீழே இறக்கிவிட்டு, விமானம் முழுவதும் சோதனை செய்தனர். 

ஆனால் விமானத்தில் சந்தேகப்படும்படியாக எதுவும் இல்லை. இருப்பினும் போலீசார் செல்போனில் பேசிய பயணியை கைது செய்து, விமான நிலைய காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இந்த சம்பவத்தால் விமானம் சுமார் இரண்டு மணி நேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

man arrested for mentioned bomb over call in delhi


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->