கனடாவில் காலிஸ்தான் தீவிரவாதி சுக்தூல் சிங் சுட்டு கொலை! - Seithipunal
Seithipunal


கனடா நாட்டில் கடந்த ஜூன் 19ல் நிஜ்ஜார் என்ற தீவிரவாதி கொல்லப்பட்டார். காலிஸ்தான் தீவிரவாதி கொலையில் இந்தியாவின் பங்கு உள்ளதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம்சாட்டியிருந்தார். 

இதனால் இரு நாடுகள் இடையேயான நட்புறவில் சிக்கல் இருந்து வரும் நிலையில், இன்று அதிகாலை கனடாவில் மேலும் ஒரு காலிஸ்தான் தீவிரவாதி சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்தியாவால் தேடப்படும் காலிஸ்தான் பிரிவினைவாத பயங்கரவாதி ஹா்தீப் சிங் நிஜ்ஜாா் கடந்த ஜூன் மாதம் சுட்டுக் கொல்லப்பட்டது முதல், இந்திய-கனடா நாடுகளுக்கு இடையே மோதல் வெடித்துள்ளது. 

இந்த கொலை சம்பவத்துக்குதற்கு இந்திய அரசு ஏஜெண்டுகளின் தலையீடு இருப்பதாக கனடா பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ குற்றஞ்சாட்டி, இந்தியாவுக்கான தூதரக அதிகாரியை நாட்டைவிட்டு வெளியேற உத்தரவிட்டார்.

இதற்கு பதிலடியாக இந்தியாவும், டெல்லியில் உள்ள கனடா நாட்டு தூதரக அதிகாரியை வெளியேற ஆணையிட்டது.

இப்படி பரபரப்பான ஒரு சூழ்நிலையில், கனடாவில் இன்று காலிஸ்தான் தீவிரவாதி சுக்தூல் சிங் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

 Khalistani Terrorist killed in Canada 


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->