2028 அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் மீண்டும் போட்டி..!
Kamala Harris to run again in the 2028 US presidential election
அமெரிக்காவில் எதிர்வரும் 2028இல் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முன்னாள் துணை அதிபர் கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.
கமலா ஹாரிஸ்
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை அடுத்துள்ள துளசேந்திரபுரம் கிராமத்தை பூர்விகமாக கொண்டவர். அமெரிக்க அரசியலில் பல்வேறு பதவிகளை வகித்த இவர், முன்னாள் அதிபர் ஜோ பைடன் ஆட்சிக்காலத்தில் துணை அதிபராக பணியாற்றினார். இதனையடுத்து கடந்த ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப்பை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
இந்நிலையில் ஒரு பேட்டி அவர் கூறியுள்ளதாவது: 'எனது பேத்திகள் நிச்சயம் வெள்ளை மாளிகையில், பெண் ஒருவர் அதிபராக இருப்பதை பார்ப்பார்கள். மீண்டும் இந்தப் பதவிக்கு போட்டியிடுவதற்கான வாய்ப்புள்ளது. இது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை. அரசியலில் எனக்கு இன்னும் எதிர்காலம் உள்ளது என பார்க்கிறேன்.
தேர்தல் பிரசாரத்தின் போது டிரம்ப் குறித்து நான் கணித்த அத்தனையையும் அவர் நிரூபித்து வருகிறார். டிரம்ப்பால் விமர்சனங்களை தாங்கிக் கொள்ள முடியவில்லை'. என்று கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.
English Summary
Kamala Harris to run again in the 2028 US presidential election