அமெரிக்க வெள்ளை மாளிகையில் அடுத்த இந்தியர்.. ஜோ அதிரடி.! - Seithipunal
Seithipunal


அமெரிக்கா நாட்டின் புதிய அதிபராக ஜோ பைடன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் பல்வேறு இந்தியர்களுக்கு வெள்ளை மாளிகையில் முக்கிய பொறுப்புகளை வழங்கியுள்ளார். துணை அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள கமலா ஹாரிஸ் தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர் என்று நமக்கு தெரியும். 

இந்நிலையில், வெள்ளை மாளிகையின் உதவி ஊடக செயலாளராக இந்திய வம்சாவளியை சார்ந்த வேதாந்த் படேல் என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். வேதாந்த் படேல் பைடனின் தேர்தல் பிரசாரத்தின் அங்கமாக இருந்து வந்தார். 

மேலும், பிராந்திய அளவிலான தகவல் தொடர்பு இயக்குனராகவும் பணியாற்றி வந்த நிலையில், அதிபராக வேட்பாளராக பைடன் அறிவிக்கும் போது, படேல் அங்குள்ள நோவாடா மற்றும் மேற்கு முதன்மை - மாநில தகவல் தொடர்பு இயக்குனராக பணியாற்றி வந்தார். இவர் இந்தியாவில் பிறந்து கலிபோர்னியாவில் இருக்கும் ரிவர்சைடு பல்கலைக்கழகம் மற்றும் புளோரிடா பல்கலைக்கழகத்தில் பயின்ற பட்டதாரி ஆவார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Joe Biden White House Assistant Media Secretary Indian descent


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->