அமெரிக்க நிறுவனங்கள் உள்நாட்டு எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் - ஜோ பைடன் - Seithipunal
Seithipunal


கச்சா எண்ணெய் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி செய்யும் ஒபெக் நாடுகள் பெட்ரோலியம் உற்பத்தியை ஒரு நாளுக்கு 2 மில்லியன் பீப்பாய்கள் அளவு குறைக்கப்போவதாக சமீபத்தில் அறிவித்தது. இதனால் சர்வதேச அளவில் பெட்ரோல்-டீசல் விலை உயரும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எரிசக்தி துறைக்கு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளார். அடுத்த மாதம் முதல் நாட்டின் எண்ணெய் சேமிப்புக் கிடங்கில் இருந்து 15 பில்லியன் பீப்பாய் எண்ணெய் கூடுதலாக வெளியேற்றும்படி அறிவுறுத்தியுள்ளார். 

இதன்மூலம், எரிபொருள் விலையை கட்டுக்குள் வைத்துக்கொள்ள உதவும் என்றும், டிசம்பர் முதல் இந்த எரிபொருள் பயன்பாட்டுக்கு வரும் என்றும், அமெரிக்க நிறுவனங்கள் உள்நாட்டு எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ள தேர்தலை கருத்தில் கொண்டு, அரசு எரிபொருள் விலையை கட்டுக்குள் வைக்க இந்த நடவடிக்கை எடுத்துள்ளது என்ற கருத்தை முற்றிலுமாக மறுத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Joe Biden says US companies should increase domestic oil production


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->