02 வருடங்களாக தந்தையின் உடலை அலமாரியில் மறைத்து வைத்த மகன்: எலும்புக்கூட்டை கைப்பற்றிய போலீசார் அதிர்ச்சி..!
Japan man hides dad body in wardrobe for 2 years to avoid funeral costs
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 86 வயதுடைய தனது தந்தையின் உடலை 02 வருடங்களாக அலுமாரியில் மறைத்து வைத்திருந்த 56 வயதான நோபுஹிகோ சுசுகி என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
நோபுஹிகோ சுசுகி சீன உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார். கடந்த ஒரு வாரமாக இவர் உணவகத்தை திறக்காமல் இருந்ததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர், போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அவரது வீட்டில் சோதனை நடத்தியத்தில், அவரது வீட்டு அலமாரியில், எலும்புக்கூடு ஒன்று இருந்ததை பார்த்து போலீசார் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதுதொடர்பாக நோபுஹிகோ சுசுகிவிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் கூறியுள்ளதாவது: கடந்த 2023-ஆம் ஆண்டு ஜனவரி மாதம், வேலை முடிந்து திரும்பிய போது தனது 86 வயதான தந்தை வீட்டில் இறந்து கிடந்தார், ஆனால் எப்படி இறந்தார் என்று தெரியவில்லை. அவருக்கு இறுதிச் சடங்குகள் செய்வதற்கு அதிகளவு செலவாகும் என்பதால், அதை தவிர்ப்பதற்காக தந்தையின் உடலை அலமாரியில் மறைத்து வைத்ததாக அவர் தெரிவித்துள்ளார். இதனைக் கேட்டு போலீசார் அதிர்ச்சி அடைந்த்துள்ளனர்.
அதாவது, ஜப்பானில், இறுதிச்சடங்கு செய்வதற்கு 1.3 மில்லியன் யென் (இந்திய மதிப்பில் ரூ7.60 லட்சம்) ஆகும் என கூறப்படுகிறது. இதன் காரணமாகவே அவர் தனது தந்தையின் உடலை மறைத்து வைத்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், "ஆரம்பத்தில் தந்தையின் உடலை மறைத்து வைத்தமைக்காக அவர் குற்ற உணர்ச்சியுடன் இருந்துள்ளார். ஆனால்,அதன் பின்னர், இந்த நிலைக்கு தனது தந்தையே காரணம் என்று நம்பி நிம்மதியடைந்ததாகவும்
அவர் தெரிவித்ததை சுட்டிக்காட்டியுள்ளனர்.
அத்துடன் அவர் தனது தந்தையின் ஓய்வூதியத்தை 02 ஆண்டுகளாக பெற்று வந்துள்ளார். இதன் காரணமாக சந்தேகத்தின் அடிப்படையில் அவரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். 56 வயதான நோபுஹிகோ சுசுகி கூடுதல் ஓய்வூதியத்தை வசூலிக்க தனது தந்தையைக்கொன்று இருக்கலாம் என்று சிலர் கூறினாலும், ஒரு சிலர் அவருக்கு அனுதாபம் தெரிவித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர்.
English Summary
Japan man hides dad body in wardrobe for 2 years to avoid funeral costs