ஈரானின் உச்ச தலைவர் கமேனி, ஒரு நவீன கால ஹிட்லர்; அவர் உயிருடன் இருக்கவே கூடாது: இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் எச்சரிக்கை..! - Seithipunal
Seithipunal


“ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி உயிருடன் இருக்கவே கூடாது” என்று இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் ஆவேசமாக குறிப்பிட்டுள்ளார்.

இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கு இடையே கடந்த ஒரு வாரமாக போர் நீடித்து வருகிறது. இன்று (ஜூன் 19) இஸ்ரேலின் சொரோகா மருத்துவமனை மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. இதில் 47 பேர் காயமடைந்துள்ளனர். தெற்கு இஸ்ரேலில் சுமார் 10 லட்சம் பேருக்கு சிகிச்சை அளிக்கக் கூடிய பெரிய மருத்துவமனையான இதன் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது இஸ்ரேலுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இனி அடுத்து இஸ்ரேலின் எதிர்வினை என்னவாக இருக்கும் என்று மத்தியஸ்த நாடுகள் மற்றும் உலக நாடுகளை அச்சமடைய வைத்துள்ளது.

சொரோகா மருத்துவமனை தாக்குதலை தொடர்ந்து, இஸ்ரேல் ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஏற்கெனவே பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ‘ஈரான் மிகப் பெரிய விலை கொடுக்க வேண்டியிருக்கும்’ என்று கூறியிருந்த நிலையில், இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ், “இஸ்ரேல் ராணுவத்துக்கு நாங்கள் இலக்குகளை வகுத்துக் கொடுத்துவிட்டோம். ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி உயிருடன் இருக்கவே கூடாது” என்று பகிரங்கமாக எச்சரித்துள்ளார்.

இது குறித்து, செய்தியாளர்களுக்கு அளித்தப் பேட்டியில் காட்ஸ் கூறியதாவது: “கமேனி ஒரு நவீன கால ஹிட்லர். அவர் எப்போதுமே தனது ஏஜென்ட்டுகள் மூலம் இஸ்ரேலை அழிக்க முயறிசிக்கிறார். எங்களைத் தாக்க நினைக்கும் இந்த நபர் உயிருடன் இருக்கவே கூடாது.

இஸ்ரேல் ராணுவத்துக்கு நாங்கள் இலக்குகளை வகுத்துக் கொடுத்துவிட்டோம். இந்த நபரை அழிப்பது என்பது எங்களுடைய இந்தப் போரின் இலக்கு. இஸ்ரேலை அழிப்போம் என்று கமேனி முன்பு பேசியது எல்லாம் இப்போது செயல்வடிவம் பெற்றுவருகிறது.” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், ஈரானின் அரசு ஊடகமான ஐஆர்என்ஏ வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது: இன்று நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில்தங்களில் இலக்கு இஸ்ரேல் ராணுவத் தளம் மற்றும் உளவுப் பிரிவு தளம் மட்டுமே என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், அவை கவ்-யாம் தொழில்நுட்பப் பூங்காவில் உள்ள நிலையில், பூங்காவுக்கு அருகே தான் சொரோகா மருத்துவமனை உள்ளதாகவும், நாங்கள் நடத்திய தாக்குதலின் அதிர்வலைகளால் ஏற்பட்ட பாதிப்புதான் மருத்துவமனையில் உணரப்பட்டதே தவிர, எங்களின் இலக்கு மருத்துவமனை அல்ல என்று செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Israel's defense minister warns Irans Supreme Leader Khamenei should never be alive


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->