காசாவின் மிகப்பெரிய அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் குண்டு மழை.!! - Seithipunal
Seithipunal


இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்புகளுக்கு இடையிலான போர் தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில் இஸ்ரேல் ராணுவம் ஜபாலியாவில் உள்ள காசாவின் மிகப்பெரிய அகதிகள் முகாம் மீது குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் 50க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட நிலையில் 150 பேர் காயமடைந்துள்ளனர்.

இஸ்ரேல் ராணுவத்தின் இந்த கொடூர தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் முக்கிய தளபதி கொல்லப்பட்டதாகவும் நிலத்தடி உள்கட்டமைப்பு இடிந்து விழுந்ததாகவும் இஸ்ரேல் அறிவித்துள்ளது.

எகிப்து ரஃபா எல்லையை திறப்பதன் மூலம் காயமடைந்த காசாக்களுக்கு இன்று முதல் சிகிச்சை அளிக்க தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. காசாவில் இணையதளம் மற்றும் தொலைத்தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளதாக பாலஸ்தீனம் குற்றம் சாட்டியுள்ளது.

இஸ்ரேலிய தாக்குதலில் 3,500 குழந்தைகள் உட்பட 8,500 பேர் கொல்லப்பட்டதாக காசா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காசாவிற்குள் ஹமாஸுடன் தனது படைகள் கடுமையான போரில் ஈடுபட்டதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.

ஏமனின் ஹுதி கிளர்ச்சியாளர்கள் நேற்று ஏவுகணைகள் மூலம் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியதை இஸ்ரேல் ராணுவம் உறுதி செய்துள்ளது. ஒரு மிகப்பெரிய ஏவுகணைகள் தொகுப்பையும், போர் விமான மூலம் குண்டுகளை வீசியதாகவும் அதனை இஸ்ரேல் ராணுவம் முறியடித்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

அதே போன்று கடந்த அக்டோபர் 16ம் தேதி தெற்கு நகரமான தைராவில் வெள்ளை பாஸ்பரஸ் தாக்குதல்களை இஸ்ரேல் நடத்தியதாக லெபனான் குற்றம் சாட்டியுள்ளது. இந்த நிலையில் இஸ்ரேல் உடனான தூதர உறவை முறித்துக் கொள்வதாக சிலியும், பொலிவியாவும் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Israel bombed Gaza largest refugee camp


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->