காசாவில்140 ஐ.ஏ.எஃப் பயங்கரவாத இலக்குகளைத் மீது தாக்குதல்..! இஸ்ரேல் அறிவிப்பு..!
Israel announces that the IAF struck 140 terror targets in Gaza
காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில், பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட 65 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில், இஸ்ரேல் பாதுகாப்பு படை தனது எக்ஸ் வலைதளத்தில் இன்று வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது:
காசாவில், இஸ்ரேல் பாதுகாப்பு படை மற்றும் இஸ்ரேல் விமான படை இணைந்து நடத்திய தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் ராணுவ கட்டமைப்புகள் மற்றும் வளாகங்கள் தகர்க்கப்பட்டன. பீரங்கியை தாக்கி அழிக்கும் ஏவுகணையை ஏவிய பல்வேறு பயங்கரவாதிகளும் அடையாளம் காணப்பட்டு கொல்லப்பட்டனர் என தெரிவித்துள்ளது.
அடுத்தத்தக்க தெற்கு காசாவில் 140 பயங்கரவாத இலக்குகளை இஸ்ரேல் பாதுகாப்பு படை தாக்குதல் நடத்தி அழித்துள்ளது. ஐ.டி.எஃப் துருப்புக்கள் பயங்கரவாதிகளை அகற்றினர் மற்றும் கண்காணிப்பு உபகரணங்கள் மற்றும் இராணுவ உள்கட்டமைப்பை அகற்றியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
எனினும், ஹமாஸ் அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், இஸ்ரேல் தொடர்ந்து நடத்தும் தாக்குதலால், காசாவில் போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், மத்தியஸ்தர்களின் நேர்மறையான எந்தவித அணுகுமுறையையும் பரிசீலனை செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம் என குறிப்பிட்டுள்ளது.
English Summary
Israel announces that the IAF struck 140 terror targets in Gaza