ஈரான் எச்சரிக்கை! இஸ்ரேல் நடத்தும் தாக்குதலுக்கு பெரும் விலை கொடுக்க நேரிடும்...! - Seithipunal
Seithipunal


இன்று அதிகாலை இஸ்ரேல்,  ஈரான் தலைநகர் தெஹ்ராம் உள்ளிட்ட பகுதிகள் மீது,கடுமையான வான்வழித் தாக்குதல் நடத்தியது.இந்நிலையில் கடந்த திங்கள்கிழமை ஈரானின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் (SNSC), 'இஸ்ரேல் தங்களை தாக்கும் என்று உளவுத்துறை தகவல் கிடைத்தாகவும், அவ்வாறு இஸ்ரேல் தாக்கினால் அந்நாட்டின் ரகசிய அணுசக்தி தளங்களை குறிவைத்து அழிப்போம்' என்று தெரிவித்தது.

இதனிடையே, ஈரானுக்கு எதிராக இராணுவ நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்தார். இதில், தெஹ்ரானின் குடியிருப்பு பகுதிகளில் பகுதியளவு இடிந்து விழுந்த கட்டிடங்களின் படங்கள் வெளியாகி வருகின்றன.

இந்த சூழலில், தெஹ்ரான் உள்ளிட்ட நகரங்களை குறிவைத்து இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்களுக்கு இஸ்ரேல் பெரும் விலை கொடுக்க நேரிடும் என்று ஈரானிய ஆயுதப்படை செய்தித் தொடர்பாளர் அபோல்பஸ்ல் ஷேகார்ச்சி எச்சரித்துள்ளார்.மேலும், இஸ்ரேலின் இந்த நடவடிக்கை மத்திய கிழக்கை மீண்டும் ஒரு போர் போன்ற அச்ச நிலைக்குத் தள்ளுகிறது.

இதற்கிடையில் இரு நாட்டு வான்வெளிகளும் மூடப்பட்டுள்ளன. இஸ்ரேலில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் உயர் ஆலோசகர் அலி ஷம்கானியும் இஸ்ரேலிய தாக்குதலில் காயமடைந்ததாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில், மூத்த இராணுவ ஜெனரல் முகமது பகேரி கொல்லப்பட்டதாக வெளியான செய்திகளை ஈரான் மறுத்துள்ளது. இதில்,பகேரி தற்போது போர் அறையில் இருப்பதாகவும், அவருக்கு எந்த காயமும் ஏற்படவில்லை என்றும் ஈரானிய அரசு ஊடகமான ஐஆர்என்ஏ செய்தி வெளியிட்டுள்ளது.இதில் குறிப்பாக,அமெரிக்காவின் ஒப்புதல் இல்லாமல் இஸ்ரேல் ஈரானின் அணுசக்தி நிலையங்களைத் தாக்க முடிவு செய்யக்கூடும் என்று பல நாட்களாக அமெரிக்க உளவுத்துறை முன்பு செய்தி வெளியிட்டிருந்தது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Iran warns Israel that it will pay a heavy price for its attacks


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->