'அமெரிக்காவின் முகத்தில் அறைந்துள்ளோம்: அவர்கள் தலையிடாவிட்டால் இஸ்ரேல் அழிந்து இருக்கும்': ஈரான் தலைவர் அயதுல்லா அலி கமேனி பேட்டி..! - Seithipunal
Seithipunal


 ஈரான் தலைவர் அயதுல்லா அலி கமேனி அந்நாட்டு மக்களிடம் டிவி மூலம் உரையாற்றியுள்ளார். அப்போது அவர், 'அமெரிக்காவின் முகத்தில் அறைந்துள்ளோம்,' என்று கூறியுள்ளார்.

இது தொடர்பாக அந்நாட்டு மக்களுக்கு அவர் ஆற்றிய உரையில் கூறியுள்ளதாவது: நகர்ப்புறம் மற்றும் ராணுவ இடங்களை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதலையும், அந்நாட்டின் பல முனை பாதுகாப்பையும் ஈரான் ராணுவப்படைகள் வெற்றிகரமாக முறியடித்துள்ளன என்று  பெருமிதம் அடைந்துள்ளார். மேலும் அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினாலும் அந்நாடு எதிர்பார்த்த வெற்றியை பெற முடியவில்லை எனவும், இதனால், டிரம்ப் நடிக்க வேண்டியிருந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், எதிர்காலத்தில் ஈரானுக்கு எதிராக நடக்கும் எந்த அத்துமீறலுக்கும், பெரிய விலை கொடுக்க வேண்டியிருக்கும் வரும் என்றும், அமெரிக்க தளத்தை தாக்கியது பெரிய விஷயம் என்றும், எதிர்காலத்தில் அத்துமீறல்கள் தொடர்ந்தால், அதன் மீதான தாக்குதல் தொடரும் என்றும் எச்சரித்துள்ளார்.

அத்துடன் அவர் மேலும் குறிப்பிடுகையில், எதிரிகள், ஏவுகணைகள் அல்லது அணுசக்தி திட்டங்கள் என நம் மீது தாக்குதலுக்கு காரணம் என கூறினர். ஆனால், நாம் சரண் அடைவோம் என்பதே அவர்களின் உண்மையான நோக்கமாகும் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

தொடர்ந்து, அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசும்போது, ஈரான் சரணடைய வேண்டும் எனச் சொல்கிறார். ஈரான் சரணடைந்தால் அமெரிக்கா திருப்திப்படும் என்ற உண்மையை டிரம்ப் வெளிப்படுத்தியுள்ளார் என்றும், ஆனால், சரணடைவது எப்போதும் நடக்காது. நமது தேசம் மிகவும் சக்திவாய்ந்தது என்று மக்களிடம் பேசியுள்ளார்.

அத்துடன், அமெரிக்காவின் முகத்தில் ஈரான் அறைந்துள்ளதாகவும்,  அமெரிக்கா தலையிடாவிட்டால் இஸ்ரேல் அழிந்து இருக்கும் என்றும் எச்சரித்துள்ளார். இதனை உணர்ந்ததால் தான் அமெரிக்க இந்த போரில் தலையிட்டதாகவும், ஈரானின் கடுமையான தாக்குதல் காரணமாக, இஸ்ரேல் நசுக்கப்பட்டதால், அந்நாட்டு சரியும் நிலை ஏற்பட்டது என்று அயதுல்லா அலி கமேனி டிவி மூலமாக பொதுமக்கள் முன் உரையாற்றியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Iran has slapped America in the face says Iranian leader Ayatollah Ali Khamenei


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!


செய்திகள்



Seithipunal
--> -->