ஈரான் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டம்: 2 பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம்.! - Seithipunal
Seithipunal


ஈரானில் கடந்த செப்டம்பர் மாதம் ஹிஜாப் சரியாக அணியவில்லை என்று மாஷா அமினி என்ற இளம் பெண்ணை போலீசார் கைது செய்து தாக்கியதில் மாஷா உயிரிழந்தார். இந்த சம்பவத்தை கண்டித்து ஈரான் முழுவதும் பெண்கள் தங்களது தலைமுடியை வெட்டியும் ஹிஜாப்களை எரித்தும் போராட்டங்களில் ஈடுபட்டனர்.  

ஹிஜாப் எதிர்த்து போராட்டம் நடத்துபவர்களை ஒடுக்க ஈரான் அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் ஈரானில் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தின்போது, துணை ராணுவ வீரர் ருஹோல்லா அஜாமியன் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளான முகமது மஹ்தி கராமி மற்றும் செய்யத் முகமது ஹொசைனி ஆகியோர் கைது செய்யப்பட்டு, இவர்கள் 2 பேருக்கு டிசம்பர் மாதம் மரண தண்டனை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் ஈரான் அரசு இவர்கள் இரண்டு பேரையும் நேற்று காலை தூக்கிலிட்டு மரண தண்டனையை நிறைவேற்றியது என்று நீதித்துறை தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Iran Hangs 2 Anti Hijab Protesters For Killing Security Officer


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->