24 இந்திய பணியாளர்களுடன் கப்பலை சிறைப்பிடித்த ஈரான்..! - Seithipunal
Seithipunal


சர்வதேச கடல் பகுதியான ஓமன் வளைகுடாவில் கடந்த 27-ம் தேதி 24 இந்திய பணியாளர்கள் மற்றும் சில வெளிநாட்டு பணியாளர்களுடன் அமெரிக்காவுக்கு சென்று கொண்டிருந்த மார்ஷல் தீவுகள் நாட்டுக்கு சொந்தமான அட்வான்டேஜ் ஸ்வீட் என்ற கச்சா எண்ணெய் கப்பலை ஈரான் கடற்படையினர் சிறைபிடித்துள்ளனர். 

இதுதொடர்பாக ஈரான் கடற்படை வெளியிட்ட அறிக்கையில், அட்வான்டேஜ் ஸ்வீட் கப்பல் சர்வதேச எல்லையை மீறியுள்ளதால் கப்பல் சிறைபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைடுத்து கப்பலுக்கு சொந்தமான நிறுவனம், கப்பலையும், ஊழியர்களையும் பத்திரமாக மீட்க ஈரான் அரசுடன் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளது.

இந்நிலையில் ஓமன் வளைகுடாவில் பல வருடங்களாக இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருவது கண்டனத்திற்குரியது என்றும், கப்பலை விடுவிக்குமாறு அமெரிக்கா ஈரானை வலியுறுத்தி உள்ளதாகவும் அமெரிக்கா கடற்படை வெளியிட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Iran captured the ship with 24 Indian employees


கருத்துக் கணிப்பு

அதிமுக - பாஜக கூட்டணி உடைந்தால் யாருக்கு பயன்?



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக - பாஜக கூட்டணி உடைந்தால் யாருக்கு பயன்?




Seithipunal