இந்தோனேசிய நிலநடுக்கம் : இரண்டு நாட்களுக்குப் பிறகு 6 வயது சிறுவன் உயிருடன் மீட்பு.! - Seithipunal
Seithipunal


கடந்த 21 -ந்தேதி திங்கட்கிழமை இந்தோனேசியாவில் உள்ள மேற்கு ஜாவா தீவில் சியாஞ்சூர் நகரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தினால், வீடுகள், அலுவலகங்கள், கடைகள் உள்ளிட்ட பல கட்டிங்கள் இடிந்து விழுந்ததில், சுமார் 162 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், 700-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். 

அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து, இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்பதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அதன படி, நேற்று காலை அந்த இடிபாடுகளில் இருந்து மேலும் 90 பேரின் உடல்கள் மீட்கப்பட்டதனால், பலி எண்ணிக்கை 252 ஆக உயர்ந்தது. 

இந்நிலையில் இந்த நிலநடுக்கத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 271 ஆக உயர்ந்துள்ளது. அதிலும் உயிரிழந்தவர்களின் பலர் குழந்தைகள் ஆவர். மேலும் 100-க்கும் மேற்பட்டோரை காணவில்லை என்பதனால், நிலநடுக்க பகுதியில் தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்று வருகிறது.

இதையடுத்து, சியாஞ்சூர் பகுதியில் குகநாங் துணை மாவட்டத்தில் உள்ள, நக்ராக் கிராமத்தில் நடைபெற்ற தேடுதல் பணியில், நிலநடுக்க இடிபாடுகளில் சிக்கிய ஆறு வயது சிறுவனை மீட்பு பணி உயிருடன் மீட்டது. 

இந்த நிலநடுக்க இடிபாடுகளில் சிறுவனுடைய பெற்றோரின் உடல்கள் ஏற்கனவே மீட்கப்பட்டு இருந்தன. கடந்த இரண்டு நாட்களாக சிக்கியிருந்த அஜ்கா மவுலானா மாலிக் என்ற ஆறு வயது சிறுவனை இந்தோனேசிய தேசிய பேரிடர் மேலாண் கழகம் மீட்டுள்ளது. இருப்பினும் அந்த நிலநடுக்கத்தில் சிறுவனின் பாட்டி உயிரிழந்து உள்ளார்.

அந்த பாட்டியின் உடல் அருகிலேயே இந்த சிறுவன் கிடைத்துள்ளார். இதுகுறித்த வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இதனால், இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்கள் மீட்கப்படுவார்கள் என்ற நம்பிக்கை அவர்களின் உறவினர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

indonesiya Earthquake six years old children rescue


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->