பாதுகாவலரை கடித்து கொலை செய்து, தப்பி ஓடிய 18 வயது பெண் புலிகள்..! - Seithipunal
Seithipunal


உயிரியல் பூங்காவின் பாதுகாவலரை கொலை செய்துவிட்டு, பெண் புலிகள் தப்பித்து சென்ற சம்பவம் நடைபெற்றுள்ளது. 

இந்தோனேஷிய நாட்டில் உள்ள போர்னியா தீவில், சின்கா உயிரியல் பூங்கா செயல்பட்டு வருகிறது. இந்த பூங்காவில் அழிந்து வரும் சுமத்ரா இன புலி வகைகள் பாதுகாக்கப்பட்டு வளர்க்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், பூங்கா சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த பல நாட்களாக தொடர்மழை பெய்து வந்ததன் எதிரொலியாக, புலிகளின் வசிப்பிடம் சேதமாகியுள்ளது. நேற்று முன்தினம் அதிர்ச்சி தரும் வகையில், அங்கிருந்த 2 சுமத்ரா இன பெண் புலிகள், பராமரிப்பாளரை கடித்து குத்தறிவிட்டு தப்பி சென்றுள்ளது. 

18 வயதாகும் இரண்டு புலியில், ஒரு புலி உயிருடன் பிடிக்கப்பட்டது. மற்றொரு புலி ஆக்ரோஷத்துடன் இருந்து வந்ததால் சுட்டு கொலை செய்யப்பட்டது. புலி கடித்து குத்தறியதில், பூங்காவின் பராமரிப்பாளர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகியுள்ளார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Indonesia Woman Tiger Murder man and Escape From Park


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்
Seithipunal