இஸ்ரேலுக்கு எதிரான தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவு.!! - Seithipunal
Seithipunal


இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு நடத்திய தாக்குதலை தொடர்ந்து கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக போர் நீடித்து வருகிறது. காசாமீதி இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலால் சுமார் 11 ஆயிரம் பாலஸ்தீனியர்கள், 1200 இஸ்ரேலியர்கள் பலியாகி உள்ளனர்.

உலக நாடுகள் மற்றும் ஐநா சபை போரை நிறுத்த வேண்டும் என விடுத்த கோரிக்கையை இஸ்ரேல் நிராகரித்துவிட்டது. மனிதாபிமான அடிப்படையில் இந்த போரை நிறுத்த வேண்டும் என ஐநா சபையில் ஜோர்டான் அரசு தீர்மானம் கொண்டு வந்தது. அதன் மீதான வாக்கெடுப்பு நடந்த போது இந்தியா புறக்கணித்தது.

இந்த நிலையில் ஐநா சபையில் பாலஸ்தீனத்தில் இஸ்ரேலியர்களை குடியமர்த்துவதை கண்டித்து தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பின்போது இந்தியா ஆதரவு தெரிவித்து வாக்களித்துள்ளது. மேலும் அமெரிக்கா மற்றும் கனடா உள்ளிட்ட நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வாக்களித்த நிலையில் 18 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் புறக்கணித்தன என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

India supports UN resolution against Israel


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->