இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்த தீர்மானத்தை புறக்கணித்து இந்தியா!! - Seithipunal
Seithipunal


வடக்கு காசா மீது ஹமாஸ் அமைப்பினரை ஒழிக்கும் நோக்கில் இஸ்ரேல் ராணுவம் விமானப்படை மூலம் தொடர் தாக்குதல் நடத்திவரும் நிலையில் தரைவழி தாக்குதலை நடத்த ஆயத்தமாகி வருகிறது. அதனை முறியடிக்கும் நோக்கில் ஈரானுடன் இணைந்து முப்படை தாக்குதலை நடத்த ஹமாஸ் அமைப்பு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில் இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போரை மனிதாபிமான அடிப்படையில் நிறுத்த வலியுறுத்தி ஐநா சபையில் இன்று தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

ஐநா சபையில் மொத்தம் 193 நாடுகள் உறுப்பினராக உள்ள நிலையில் 120 நாடுகள் போர் நிறுத்த தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளது. 14 நாடுகள் போர் நிறுத்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் 45 நாடுகள் இந்த தீர்மான வாக்கெடுப்பில் பங்கேற்காமல் புறக்கணித்து உள்ளது. இந்த வாக்கெடுப்பில் இந்தியாவும் பங்கேற்காமல் புறக்கணித்து இருப்பது குறிப்பிடத்தக்க. எனினும் பெரும்பான்மை ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதால் போர் நிறுத்தப்பட வாய்ப்புள்ளதாகவே கருதப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

India ignores Israel Hamas ceasefire resolution


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->