டி20 உலகக் கோப்பை இந்திய அணி அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


உலக கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மா மற்றும் துணை கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டுள்ளனர். 

வருகின்ற ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் மேற்கு இந்திய தீவுகளில் டி20 உலக கோப்பை நடைபெற உள்ளது. இதற்கான இந்திய அணி தேர்வு குறித்து இன்று ஆலோசனை நடத்தி 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 

நடப்பு ஆண்டு ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய ஷிவம் துபே, சஞ்சு ஷாம்சன் ஆகியோர் உலக கோப்பை அணியில் இடம் பெற்றுள்ளனர். விபத்தில் சிக்கி நீண்ட காலமாக அணியில் இல்லாமல் இருந்த ரிஷபந்க்கும் அணியில் இடம் கிடைத்துள்ளது. 

மோசமான ஃபார்ம் காரணமாக விமர்சிக்கப்பட்டு வந்த ஹர்திக் பாண்டியாவுக்கும் இந்திய அணியில் இடம் கிடைத்துள்ள நிலையில் தமிழக வீரர்கள் ஒருவர் கூட அணியில் இடம்பெறவில்லை.

இந்திய அணியில் ரோஹித் சர்மா, விராட் கோலி, யஷ்ஸ்வி ஜெய்ஸ்வால், சூரியகுமார் யாதவ்,  குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சஹால், ஹர்திக் பாண்டியா, அர்ஷ்தீப் சிங், மொகமது சிராஜ், ரவீந்திர ஜடேஜா, ஜஸ்ப்ரீத் பும்ரா, ரிஷப் பந்த், சஞ்சு சாம்சன், ஷிவம் துபே, அக்சர் படேல் ஆகியோர் இடப்பெற்றுள்ளனர். 

ரிசர்வ் வீரர்களாக ஷுப்மன் கில், ரிங்கு சிங், கலீல் அகமது ஆவேஷ் கான் ஆகியோர் இடப்பெற்றுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

T20 World Cup Indian Team Announcement


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->