லைக்கிற்கு ஆசைப்பட்டு வாழ்க்கையை இழக்காதீர்கள்.! நச்சு ஏரியில் நீந்திய நபருக்கு நேர்ந்த சோகம்..!! - Seithipunal
Seithipunal


நாம் வாழும் உலகில் பல விதமான விசித்திர இடங்கள் உள்ளது. அவ்வாறான இடங்களுக்கு மக்கள் சென்று., அதன் விசித்திரத்தை கண்டு மகிழ்வதும்., இணைய வாழ்க்கையில் அந்த இடங்கள் குறித்த புகைப்படங்கள் மற்றும் விடீயோக்களை எடுத்து தங்களின் இணைய பக்கத்தில் பதிவு செய்வதும் வழக்கம். 

இந்த நிலையில்., ஸ்பெயின் நாட்டில் உள்ள தாது ஏரியில் முகநூல் லைக்குக்காக நீச்சல் அடித்த நபரின் உடல் நிலையானது மோசமாகியுள்ளது பெறும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Spain, Spain toxic lake,

ஸ்பெயின் நாட்டில் உள்ள மாண்டி நெமே என்ற பகுதிக்கு அருகில் ஏரியானது கடலை போன்ற நீல நிறத்துடன்., பார்ப்பதற்கு அழகாகவும் காட்சியளிக்கும். இந்த இடத்திற்கு செல்லும் பல சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் இந்த ஏரியின் அழகை பதிவு செய்து பகிருவது வழக்கம். 

இந்த ஏரியில் நீந்தி அதிகளவு லைக்குகளை பெற ஆசைப்பட்ட நபர்., டங்ஸ்டன் தாது நிறைந்த சுரங்கத்துடன் இணைக்கப்பட்ட ஏரியில் இறங்கி நீதியதன் காரணமாக கடுமையான வாந்தி மற்றும் பேதிக்கு உள்ளாகி., உடலில் அரிப்பு போன்ற பிரச்சனைகளுக்கு உள்ளாகியுள்ளார். 

Spain, Spain toxic lake,

பொதுவாக இந்த ஏரியானது நச்சு தன்மையுள்ள ஏரி என்பது உள்ளூர் மக்களுக்கும் தெரிந்த ஒன்றாகும். மேலும்., அங்குள்ள பகுதியில் எச்சரிக்கையாக பதாகைகளும் வைக்கப்பட்டுள்ள நிலையில்., லைக்குகளுக்காக இந்த செயலை செய்ததால் உடல் நலக்குறைவிற்கு ஆளாகியுள்ளார். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Spain man swim toxic lake injuries his health admit in hospital


கருத்துக் கணிப்பு

தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விழாவினை தமிழில் நடத்த வேண்டும் என திமுக வலியுறுத்துவது?
கருத்துக் கணிப்பு

தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விழாவினை தமிழில் நடத்த வேண்டும் என திமுக வலியுறுத்துவது?
Seithipunal