நியூசிலாந்தில் வெடித்து சிதறிய எரிமலை..! ஒருவர் பரிதாப பலி., 20 க்கும் மேற்பட்டோர் படுகாயம்..!! - Seithipunal
Seithipunal


இயற்கை எழில் நிறைந்த தீவுகள் அடங்கிய நாடுகளான நியூசிலாந்து நாட்டில் ஆபத்தான எரிமலைகள் இருக்கின்றன. இங்குள்ள எரிமலைகள் அவ்வப்போது வெடித்து சிதறுவதும் வழக்கமான ஒன்று. 

இந்த நிலையில்., இன்று திடீரென எரிமலை ஒன்று வெடித்து சிதறியதில் 20 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தாக தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. நியூசிலாந்து நாட்டில் இருக்கும் வெள்ளை தீவு என்ற பகுதியில் உள்ள எரிமலை வெடித்து சிதறியது. 

இதனால் எரிமலை சிதறியதில் எரிமலை குழம்பு ஆனது தீப்பிழம்பாக வெளிவந்து மக்களுக்கு பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இத்தீவிற்கு சுற்றுலா சென்ற மக்கள் அங்கேயே மாட்டிக்கொண்டுள்ளதாகவும்., அவர்களை மீட்கும் பணியில் நியூஸிலாந்து அரசு தற்போது மேற்கொண்டு வருகிறது. 

எரிமலை வெடித்ததில் காயமடைந்த 20 பேரையும் மீட்டு அவர்களுக்கு சிகிச்சை அளித்து வருவதாகவும் நியூஸிலாந்து அரசு தெரிவித்துள்ளது. மேலும்., இந்த எரிமலை வெடிப்பிற்கு சில நாட்கள் முன்னதாக அங்குள்ள மண்ணியல் ஆராய்ச்சி நிறுவனம் எரிமலை வெடிக்கலாம் என்று எச்சரிக்கை விடுத்திருந்தது. 

எரிமலை வெடிப்பினால் பாதிப்புகள் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில்., தற்போது கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளது. மேலும்., படுகாயமடைந்த மக்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில்., ஒருவர் பரிதாபமாக பலியாகியுள்ளார். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in new zealand Volcano exploded people died and injured


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->