இறந்த நபர்களின் சடலத்தை அடக்கம் செய்வதற்குள் அரங்கேறிய கொடூரம்..! துடித்துதுடித்து இறந்த 15 பேர்..!! - Seithipunal
Seithipunal


அமெரிக்க கண்டத்தில் உள்ள மெக்ஸிகோ நாட்டில் போதைப்பொருள் அதிகளவு கடத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சட்டத்திற்கு புறம்பான காரியத்தை செய்வதற்கு., போதைப்பொருள் கடந்த கும்பல் அவ்வப்போது அத்துமீறலில் ஈடுபட்டு செயல்படும் கொடூரமும் அரங்கேறி வருகிறது. 

இந்த கும்பலை கண்டறிந்து போதைப்பொருள் கடத்தல் மற்றும் பிற குற்ற சம்பவங்களில் இருந்து மக்களை காப்பாற்ற காவல் துறையினர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில்., போதை பொருளை விற்பனை செய்து வரும் இவர்களின் ஆதிக்கம் கொண்ட நகராக அங்குள்ள அக்குயிலா பகுதி உள்ளது. 

இந்த இடத்தில் போதைப்பொருள் கடத்தல் கும்பலால் கடத்தி செல்லப்பட்ட ஒரு பெண் மற்றும் அவரின் மகளை மீட்பதற்கு காவல் துறையினருக்கு நீதிமன்றத்தின் சார்பாக உத்தரவிடப்பட்டு இருந்தது. இதனையடுத்து கடத்தல் கும்பலின் செயல்பாடுகளை ரகசியமாக கண்காணித்துக்கொண்டு இருந்த காவல் துறையினர்., அங்குள்ள சாலைக்கு அருகே பதுங்கியிருந்தனர். 

காவல் துறையினர் பதுங்கியிருப்பதை கண்ட போதைப்பொருள் கடத்தல் கும்பலானது காவல் துறையினரின் வாகனம் மீது சரமாரியாக சுட்டதை அடுத்து., காவல் துறையினரின் வாகனம் தீப்பற்றி வெடித்து சிதறியது. இந்த விபத்தில் சம்பவ இடத்தில் இருந்த 14 காவல் துறை அதிகாரிகளும் பரிதாபமாக உயிரிழந்ததை அடுத்து., இந்த தகவல் காவல் துறை அதிகாரிகளுக்கு தெரியவந்துள்ளது. 

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறை அதிகாரிகள்., இந்த செய்தியை உறுதி செய்ததை அடுத்து., இவர்களை கொலை செய்த கொடூரர்களை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும்., தாக்குதலில் ஈடுபட்டவர்கள் அனைவரும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று மெக்ஸிகோ பாதுகாப்பு செயலகம் அறிவித்திருந்தது. 

இந்த சோக சம்பவத்தில் இருந்து மீண்டு வருவதற்குள் தற்போது அடுத்த கோர சம்பவமும் அரங்கேறியுள்ளது. மெக்ஸிகோ நாட்டில் உள்ள கியூரெரோ மாகாணத்தில் இருக்கும் ஐகுலா பகுதியில் சென்று கொண்டு இருந்த காரின் மீது மர்ம நபர்கள் கடுமையான துப்பாக்கி சூடை நடத்தினர். இந்த தாக்குதலில் இராணுவ வீரர் உட்பட ஆயுதமேந்திய குழுவினர் 15 பேர் பரிதமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த சம்பவம் அங்குள்ள பகுதியில் மீண்டும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in mexico 15 members killed by drug gang members


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->