அணை உடைந்து ஊருக்குள் புகுந்த வெள்ளம்.! 99 பேர் ஆட்பறித்த நீரில் சிக்கி சகதியால் துடிதுடித்து பலி.!! - Seithipunal
Seithipunal


பிரேசில் நாட்டில் உள்ள பெலோ ஹாரிசன்டே நகருக்கு தென் மேற்காக அமைத்துள்ளது புருமடின்ஹோ நகரம்.  இந்த நகருக்கு அருகில் இருக்கும் பகுதியில் இருப்பு தாது சுரங்கமானது செயல்பட்டு வந்தது. இந்த பகுதிக்கு அருகில் பழைய அணையானது பயன்படுத்தப்படாத நிலையில் இருந்து வந்தது. 

அங்கிருந்த நிலக்கரி சுரங்கத்தில் சுமார் 300 க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றி வந்தனர். இந்நிலையில்., உள்ளூர் நேரப்படி கடந்த 25 ம் தேதி அதிகாலை திடீரென அணையானது இடிந்து அதில் உள்ள நீரெல்லாம் பெருக்கெடுத்து ஓடியது.

 

இந்த சம்பவத்தில் அணையில் இருந்த நீர் அனைத்தும் பெருக்கெடுத்து ஓடி., அங்குள்ள விளைநிலங்கள் மற்றும் சாலைகளில் புகுந்து ஓடியது. இந்த விபத்தில் அங்கிருந்த பாலங்கள்., இல்லங்கள் மற்றும் வாகனங்கள் மண்ணில் புதையுண்டன. 

சுரங்கத்தில் பணியாற்றிய தொழிலாளர்கள் சுமார் 100 பேர் வரை காப்பாற்றப்பட்ட நிலையில்., 99 பேர் வெள்ளத்தில் சிக்கி பலியாகியுள்ளதாகவும்., சுமார் 358 பேரை காணவில்லை என்ற அதிர்ச்சி தகவலும் நேற்று வெளியானது.

இந்த பேரிடரில் சிக்கி தவித்த சுமார் 23 பேர் படுகாயமடைந்த நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காணாமல் போன 358 பலர் சகதியில் சிக்கி உயிரிழந்திருக்கலாம் என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Brazil dam collapsed 99 peoples died


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->