ஒரே அழைப்பில் போரை நிறுத்துவேன்! டிரம்பின் பெருமித உரை உலக கவனத்தை ஈர்த்துள்ளது...! - Seithipunal
Seithipunal


ஆசிய நாடுகளான கம்போடியா மற்றும் தாய்லாந்து இடையே 1907 ஆம் ஆண்டிலேயே சர்வதேச எல்லை வரையறுக்கப்பட்டிருந்தாலும், அதனை ஒட்டியுள்ள 11-ஆம் நூற்றாண்டின் இந்து கோவிலைச் சுற்றி இது வரை நீடித்து வந்த உரிமை தகராறு கடந்த ஜூலையில் பெரும் ரத்தப்பரவலாக மாறியது.

இரு தரப்பின் படைகளும் நேருக்கு நேர் மோதியதில் 48 பேர் உயிரிழந்ததுடன், சுமார் 3 லட்சம் மக்கள் அகதிகளாக தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டது.5 நாட்கள் நீடித்த இந்த கடும் மோதலுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேரடியாக தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தியதன் மூலம் தற்காலிக நிறுத்தம் ஏற்படுத்தப்பட்டது.

பின்னர் அக்டோபரில் மலேசியாவில், டிரம்ப் முன்னிலையில் இரு நாடுகளும் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.ஆனால் அமைதி அதிக நாட்கள் நீடிக்கவில்லை. கம்போடியா புதைத்திருந்ததாக கூறப்படும் கண்ணிவெடி வெடிப்பில் தங்கள் வீரர் ஒருவர் கடுமையாக காயமடைந்ததை காரணமாகக் காட்டி, அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக தாய்லாந்து நவம்பரில் அறிவித்தது.

அதன் தொடர்ச்சியாக கடந்த 8ஆம் தேதி மீண்டும் எல்லைப்பகுதியில் துப்பாக்கிச்சூடு வெடித்து, இரு நாடுகளிலும் 8 வீரர்கள் பலியாகினர். இது இரண்டு நாடுகளுக்கிடையில் பதற்றத்தை மேலும் தீவிரப்படுத்தியது.உச்சக்கட்ட கோபம் அடைந்த கம்போடியா அதிபர் ஹான் மானெட், தாய்லாந்தை வான்வழித் தாக்குதலால் நிலை தடுமாறச் செய்வேன் என வெளிப்படையாக கடும் எச்சரிக்கை விடுத்ததால் பிராந்தியத்தில் பரபரப்பு சூழல் நிலவுகிறது.

இதனைப் பற்றி கேள்வி எழுப்பப்பட்டபோது, பென்சில்வேனியாவில் நடைபெற்ற பொருளாதார மாநாட்டில் கலந்து கொண்ட டிரம்ப், “கம்போடியா–தாய்லாந்து பிரச்சினை மீண்டும் வெடித்ததை அறிந்திருக்கிறேன். அது எனக்கு ஒரு போன் காலின் விஷயம். 10 மாதங்களில் இந்தியா–பாகிஸ்தான் உட்பட 8 நாடுகளின் மோதல்களை நிறுத்தியிருக்கிறேன்.

நமக்கிருக்கும் ‘சக்தி',அதாவது வரிவிதிப்பு போதுமானது; ஒரு அழுத்தத்தில் அனைத்தையும் சரி செய்ய முடியும்,” என்று பெருமிதமாக தெரிவித்தார்.இந்தியா–பாகிஸ்தான் இடையேயான மோதலை தனது மத்தியஸ்தத்தால் தான் அடக்கி வைத்ததாக டிரம்ப் இதுவரை 70-க்கும் மேற்பட்ட முறை கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் இந்நாடுகளுக்கிடையேயான பதற்றத்தில் மூன்றாம் தரப்பின் தலையீட்டை இந்தியா தொடர்ந்து மறுத்து வருவதே உண்மை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

I stop war single phone call Trumps boastful statement attracted global attention


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?




Seithipunal
--> -->