இங்கிலாந்தை புரட்டி போட்ட யூனிஸ் புயல்.. 32 ஆண்டுகளில் மிக மோசமான பாதிப்புகள்..! - Seithipunal
Seithipunal


ஐரோப்பிய நாடுகளில் யூனிஸ் புயலால் இதுவரை 13 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இங்கிலாந்தில் கடந்த 32 வருடங்களில் இல்லாத அளவுக்கு மிக மோசமான புயலாக யூனிஸ்  புயல் உருவாகி உள்ளது. இங்கிலாந்தின் வைட் தீவில் மணிக்கு  மணிக்கு 122 மைல் வேகத்தில் புயல் வீசியதாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த புயல் காரணமாக நாடு முழுவதும் மின்சாரம் நிறுத்தி வைக்கப்பட்டன. பள்ளி கல்லூரி வணிக வளாகங்கள் போக்குவரத்து சேவையும் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்தப் புயலின் தாக்கம் இங்கிலாந்தை தாண்டி ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.

நெதர்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் அயர்லாந்து ஆகிய நாடுகளிலும் புயலின் தாக்கம் அதிக அளவில் உள்ளது. இந்நிலையில், யூனிஸ் புயலால் ஐரோப்பிய நாடுகளில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பல நாடுகளில் மரங்கள் முறிந்து போக்குவரத்து சேவை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Hurricane Eunice has hit the UK hardest


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->