ஐரோப்பிய ஒன்றியத்தின் ரஷ்யா மீதான புதிய பொருளாதார தடைகளை ஆதரிக்க ஹங்கேரி அரசு மறுப்பு.! - Seithipunal
Seithipunal


ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் இடையேயான போர் கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி முதல் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்போரில் ரஷ்யாவின் தாக்குதலை கண்டித்து அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்தன. 

இதனால் ரஷ்யாவிடம் இருந்து இறக்குமதி செய்யப்படும் உணவு, எரிவாயு உள்ளிட்டவற்றை சார்ந்து இருந்த ஐரோப்பிய நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் எரிவாயு தேவைக்காக ஐரோப்பிய ஒன்றியம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதில் இயற்கை எரிசக்தி பயன்பாட்டை அதிகரிக்கும் வழிகளை ஐரோப்பிய நாடுகள் தீவிரமாக அராய்ந்து வருகின்றன. இந்நிலையில் ரஷ்யா மீது புதிய பொருளாதார தடையை விதிப்பதற்காக ஐரோப்பிய ஒன்றியம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

இதில் ரஷ்யா பொருளாதாரத்தை மேலும் பாதிப்படைய செய்யவும், ரஷ்ய எண்ணெய் விலையை சட்ட வரம்புக்குள் கொண்டு வரவும், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. மேலும் ரஷ்ய பொருட்களின் இறக்குமதிக்கு புதிய தடைகளை விதிக்கவும் ஐரோப்பிய ஒன்றியம் திட்டமிட்டுள்ளது. 

இந்த புதிய தடைகளை விதிப்பதற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 உறுப்பு நாடுகள் அங்கீகரிக்க வேண்டும். ஆனால் ரஷ்யா எரிசக்தி மீதான ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய பொருளாதார தடைகளை ஆதரிக்க ஹங்கேரி அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து ஹங்கேரி பிரதமர் விக்டர் ஆர்பன், ரஷ்யா மீதான ஐரோப்பிய ஒன்றியத்தின் பொருளாதார தடைகள் கடுமையான எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் என்றும், இது எரிசக்தி விலையை உயர்த்துவது மட்டுமல்லாமல், ஐரோப்பா மற்றும் உலக பொருளாதாரத்தின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும் என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Hungarian government refuses to support EU new economic sanctions on Russia


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->