அமெரிக்காவில் கோர விபத்து : தீயில் கருகி 4 இந்தியர்கள் பரிதாபமாக உயிரிழந்த சோகம்! - Seithipunal
Seithipunal


அமெரிக்காவில் முன்னாள் சென்ற கார்கள் மீது லாரி  மோதியதில், 4 இந்தியர்கள் தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் அர்கன்சஸ் நெடுஞ்சாலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு  ஏற்பட்ட பயங்கர விபத்தில், நெடுஞ்சாலையில் பயங்கர வேகமாக சென்ற லாரி முன்னால் சென்ற கார்கள் உள்பட 5 வாகனங்கள் மீது மோதி விபத்துக்குள்ளானதில், மளமளவென கார் தீ பற்றி எரிந்தது.

இந்த கோர விபத்தில் காரில் பயணித்த பெண் உள்பட 4 இந்தியர்கள் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்நிலையில் உயிரிழந்த இந்தியர்களில் தர்ஷினி வாசுதேசன் என்ற இளம்பெண் தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்று தகவல் வெளியாகியுள்ளது.அதேபோல், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்தவர்களும் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

மேலும் உயிரிழந்த இந்தியர்களின் உடல்களை இந்தியாவுக்கு கொண்டுவர மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் மு4 இந்தியர்கள் தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் அவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Horrible accident in America 4 Indians tragically died in a fire


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->