கரோனாவை தொடர்ந்து கட்டவிழ்ந்த ஹாண்டாவைரஸ்.. அறிகுறிகள் என்னென்ன?..!! - Seithipunal
Seithipunal


சீன நாட்டினை சார்ந்த பத்திரிகையான குளோபல் டைம்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், சீன நாட்டில் உள்ள யூகான் மாகாணத்தை சார்ந்த நபர் பேருந்தில் கடந்த திங்கள் கிழமை பணிக்கு சென்று கொண்டு இருந்தார். 

இவர் எதிர்பாராத விதமாக இறந்துள்ளார். இவருக்கு ஹாண்டா வைரஸ் என்ற அறிகுறியால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தது உறுதியாகியுள்ளது. இந்த வைரஸ், வைரஸ்களின் குடும்பம் ஆகும். இவை கொறித்துண்ணிகளால் பரவுகிறது. 

இதனால் பிற நோய்களும் மக்களுக்கு ஏற்படும் வாய்ப்புள்ளது. இந்த தகவலை நோய்கட்டுப்பாட்டு தடுப்பு மையங்கள் தெரிவித்துள்ள நிலையில், குறிப்பிட்ட ஹாண்டாவைரஸ் நுரையீரல் மற்றும் சிறுநீரகத்தில் பாதிப்பை ஏற்படுத்தி இரத்தக்கசிவை ஏற்படுத்தி காய்ச்சலை ஏற்படுத்தும். 

மேலும், இந்த நோயானது சிறுநீர், மலம் மற்றும் கொறித்துண்ணிகளுடைய உமிழ்நீருடன் தொடர்பு கொண்டிருக்கும் பட்சத்தில் நம்மை பாதிக்கும் என்றும், இதன் அறிகுறியாக தலைவலி, காய்ச்சல், தலைசுற்றல், குளிர் பிரச்சனை, வயிற்று பிரச்சனை, உடல் சோர்வு, தசைகளில் வலி போன்றவை இருக்கும். இதில் இருமல் மற்றும் மூச்சுத்திணறல் ஆபத்தான கட்டத்திற்கு வழிவகை செய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Hantavirus affected and now spread in china


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->