பிரான்சில் எரிபொருள் தட்டுப்பாடு - அரசின் எண்ணெய் கையிருப்பை விடுவிக்க முடிவு? - Seithipunal
Seithipunal


உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததையடுத்து ஐரோப்பிய மற்றும் மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார மற்றும் வணிகம் சார்ந்த தடைகளை விதித்தது.

இதனால் ரஷ்யாவிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லும் எரிபொருள் விநியோகம் முற்றிலும் தடைபட்டது. மேலும் எரிபொருளுக்காக ரஷ்யாவைச் சார்ந்துள்ள ஐரோப்பிய நாடுகளில் எரிபொருட்களின் விலை உயர்ந்ததுடன், எரிபொருள் பற்றாக்குறை நிலவி வருகிறது.

மேலும் பிரான்சில் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகள் எரிபொருள் தட்டுப்பாடினால் கடுமையாக பாதுகாக்கப்பட்டுள்ள நிலையில், எரிபொருள் விலையை கட்டுப்படுத்துவதற்காக பிரான்ஸ் அரசு மற்றும் எரிபொருள் நிறுவனங்கள் மக்களுக்கு மானியம் அளித்து வருகிறது.

இந்நிலையில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் பணியாளர்கள் ஊதிய உயர்வு வேண்டி, வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் எரிபொருள் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து எரிபொருள் தட்டுப்பாட்டினை சமாளிக்கும் வகையில் பிரான்ஸ் நாட்டின் எண்ணெய் கையிருப்பை விடுவிக்க அரசு முடிவெடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மேலும் கடந்த 10ஆம் தேதி நிலவரப்படி, பிரான்சில் 2000 எண்ணெய் விநியோக மையங்களில் எண்ணெய் கையிருப்பு முற்றிலுமாக தீர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

France decided to release oil reserve to tackle oil shortage


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->