ஸ்பெயினில் கட்டுக்கடங்காமல் பரவி வரும் காட்டுத்தீ.! 90,000 ஹெக்டேர் காடுகள் எரிந்து நாசம் - Seithipunal
Seithipunal


கடந்த சில வாரங்களாக காலநிலை மாற்றம் காரணமாக உலகின் பல பகுதிகளில் வெப்பம் அதிகரித்துள்ளது. குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் நடப்பாண்டில் வெப்ப அலையின் தாக்கம் மிக அதிகமாக உள்ளது. 

இதனால் அங்கு சராசரி வெப்பநிலை உயர்ந்து மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளன நிலையில் பல இடங்களில் காட்டுத்தீ பற்றி எரிந்து வருகின்றன.

இந்நிலையில் ஸ்பெயின் நாட்டில் டெலோடோ பகுதியில் உள்ள காட்டுப்பகுதிகளில் ஏற்பட்ட தீயானது வேகமாக பரவி வரும் நிலையில், இந்த காட்டுத்தீயால் சுமார் 90 ஆயிரம் ஹெக்டேர் நிலப்பரப்பில் உள்ள மரம், செடி உள்ளிட்டவை எரிந்து சாம்பலாகியுள்ளன.

டெலோடோ பகுதியை சுற்றியுள்ள குடியிருப்பு பகுதிகளில் மக்கள் வெளியேற்றப்பட்டு, போக்குவரத்து மற்றும் மலையேற்றம் முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது.

மேலும் தொடர்ந்து நிலவும் கடும் வெப்பம் மற்றும் காற்று காரணமாக காட்டுத்தீ கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. இதையடுத்து ஸ்பெயின் ராணுவம் மற்றும் பேரிடர் மீட்புப் படையினர் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Forest fire ravages spain


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->