முதல் டெஸ்ட்: முதல் நாளில் வங்காளதேசம் 292 ரன்கள் குவிப்பு! - Seithipunal
Seithipunal


இலங்கை - வங்காளதேச முதல் டெஸ்ட் போட்டியில்  முதல் நாள் ஆட்ட நேர முடிவில் வங்காளதேசம் 3 விக்கெட்டுகளை இழந்து 292 ரன்கள் குவித்துள்ளது. இதில் சாண்டோ 136 ரன்களுடனும், முஷ்பிகுர் ரஹீம் 105 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

 3 வடிவிலான தொடரில் விளையாட வங்காளதேச கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.   முதலில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகள் விளையாடுகின்றனர்.
 இதில் இவ்விரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி காலே மைதானத்தில் இன்று காலை தொடங்கியது.அப்போது   டாஸ் வென்ற வங்காளதேசம் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது முதல்  இன்னிங்சை தொடங்கினர்.

வங்காளதேச அணி ஆரம்பமே தொடக்க ஆட்டக்காரகள் ஆன ஷாத்மான் இஸ்லாம் 14 ரன்களிலும், அனாமுல் ஹக் டக் அவுட் ஆகியும் அதிர்ச்சி அளித்தனர். அடுத்து வந்த மொமினுல் ஹக் நீண்ட நேரம் தாக்குப்பிடிக்கவில்லை அவுட் ஆகி வெளியேறினார்.இதையடுத்து கேப்டன் நஜ்மூல் ஹொசைன் சாண்டோ - முஷ்பிகுர் ரஹீம் கூட்டணி அபாரமாக ஆடி அணியை சரிவிலிருந்து மீட்டது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் சதமடித்து அசத்தினர்.

முதல் நாள் ஆட்ட நேர முடிவில் வங்காளதேசம் 3 விக்கெட்டுகளை இழந்து 292 ரன்கள் குவித்துள்ளது. இதில் சாண்டோ 136 ரன்களுடனும், முஷ்பிகுர் ரஹீம் 105 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.முதல் நாள் முடிவில்  இலங்கை தரப்பில் தரிந்து ரத்நாயக்கா 2 விக்கெட்டுகளும், அசிதா பெர்னண்டோ ஒரு விக்கெட்டும் வீழ்த்தியுள்ளனர்.நாளை இரண்டாம் நாள் ஆட்டம் நடைபெறஉள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

First Test Bangladesh accumulates 292 runs on the first day


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->